DCW நிறுவனத்தின் மார்ச் 31 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) இன்று வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் DCW வரவு 295 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் (January 2010 – March 2010) வரவு 275 கோடி ரூபாய், லாபம் 8 கோடியே 66 லட்சம் ரூபாய்.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 46 கோடி ரூபாய் (இலாபம் - 5.1 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 126 கோடி ரூபாய் (இலாபம் - 6.17 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 121 கோடி ரூபாய் (நஷ்டம் - 1.18 கோடி ரூபாய்).
2010 - 2011 முழு ஆண்டின் வரவு 1057 கோடி ரூபாய். இதில் சோடா ஆஷ் பிரிவின் வரவு 168 கோடி ரூபாய் (இலாபம் – 13.78 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 419 கோடி ரூபாய் (இலாபம் - 24.81 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 468 கோடி ரூபாய் (நஷ்டம் - 1.14 கோடி ரூபாய்). ஆண்டிறுதி லாபம் 35 கோடி ரூபாய்.
இன்று நடந்த கூட்டத்தில் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 18 சதவீத டிவிடென்ட் அறிவிக்கப்பட்டது.
மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்
தகவல்:
www.dcwmonitor.com
|