திருச்சி ஜமால் முஹம்மத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் காயல்பட்டினம் நகரைச் சார்ந்த மாணவர்கள், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தை அனுகலாம் என, அக்கல்லூரியின் துணை முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னர், மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமால் முஹம்மத் கல்லூரியின் துணை முதல்வரும், வரும் ஜூன் மாத துவக்கத்திலிருந்து முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான பேராசிரியர் முனைவர் ஆர்.காதர் முஹ்யித்தீனை, அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் பிரிவினர், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில் 15.05.2011 அன்று காலை 11.00 மணிக்கு, சிங்கப்பூர் பெங்கூலன் மஸ்ஜித் பன்னோக்கு கூட்டரங்கில் சந்தித்தனர்.
அப்போது, ஜமால் முஹம்மத் கல்லூரியின் சிங்கப்பூர் முன்னாள் மாணவர் பிரிவின் சார்பில் அவருக்கு “சிறந்த கல்வியாளர்” விருது வழங்கினார் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்.
அவருடன் கலந்துரையாடிய பின்னர், திருச்சி ஜமால் முஹம்மத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கை விரும்பும் மாணவர்கள் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தை magdoom_ece@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு குறித்து சிங்கப்பூர் “தமிழ் முரசு” பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி:-
தகவல்:
சிங்கை காயல் நல மன்றம் சார்பாக,
முஹம்மத் உமர் ரப்பானீ,
சிங்கப்பூர்.
செய்தியில் சில தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. |