இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15-வது மாநாடு காயல்பட்டினத்தில், 2011 ஜூலை 08,09,10 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களிலும் நடைபெறவிருக்கிறது.
இம்மாநாட்டில் சிறப்பு மலர், இஸ்லாமிய இலக்கிய ஆய்வு நூல், இலக்கிய இணையம் ஆகியவற்றுடன், காயல்பட்டினத்தைச் சார்ந்த புலவர்கள் இயற்றிய நூல்கள் சில மறுமதிப்பும் செய்யப்படவுள்ளன.
இம்மாநாட்டில் மலேசியா, இலங்கை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆன்மிகம் தொடர்பானவர்களும், தமிழறிஞர்களும் பங்கேற்கும் ஆய்வரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம், மகளிர் அரங்கம், ஆன்மிக அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
மாநாட்டை முன்னிட்டு இரண்டு வகையான கட்டுரைப் போட்டிகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன:-
(1) கல்லூரி மாணவர்களுக்கான - மாநில அளவிலான கட்டுரைப் போட்டி:
“இஸ்லாமும், இளைய தலைமுறையும்” என்ற தலைப்பில் நடத்தப்படும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டி இது.
ஏ4 தாளில் 10 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை அமைந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு முதற்பரிசாக 7,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 5,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1,000 ரூபாய் பத்து பேருக்கும் வழங்கப்படவுள்ளது.
(2) காயல்பட்டினம் மத்ரஸா / பள்ளிக்கூட மாணவர்களுக்கான - நகரளவிலான கட்டுரைப் போட்டி:
“இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்கு காயல்பட்டினத்தின் பங்களிப்பு” என்ற தலைப்பில் நடத்தப்படும் காயல்பட்டினம் பள்ளிக்கூடம் / மத்ரஸா மாணவர்களுக்கான நகர அளவிலான கட்டுரைப் போட்டி இது.
ஏ4 தாளில் 10 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை அமைந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு முதற்பரிசாக 5,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 500 ரூபாய் பத்து பேருக்கும் வழங்கப்படவுள்ளது.
போட்டிகளுக்கான விதிமுறைகள்:
***கட்டுரையாளர்கள் தமது பெயர், பயிலும் வகுப்பு, கல்லூரி / பள்ளிக்கூடம் / மதரஸா பெயர், இல்ல முகவரி, கைபேசி எண் ஆகிய விபரங்களுடன், தாம் கல்லூரி / பள்ளிக்கூட / மதரஸா மாணவர் என்பதற்கான சான்றிதழை அக்கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது தமிழ்த்துறை தலைவரிடம் பெற்று, கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
***கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 30.05.2011.
***பரிசுக்குரிய கட்டுரைகளை இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம் தேர்வு செய்யும். இப்போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
போட்டிகளில் பங்கேற்கின்ற மாணவர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, காயல்பட்டினத்தில் நடைபெறவிருக்கும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு நிறைவு நாளான 10.07.2011 ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும்
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கலைமாமணி, பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்
(பொதுச் செயலாளர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம்)
8, தம்பி சாயபு மரைக்காயர் வீதி, காரைக்கால் - 609 602
தொலைபேசி: (04368) 220764, கைபேசி: 98424 88047
இத்தகவலை, இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். |