B.A.,B.L. (Hons) (ஐந்து வருடம்), B.L. (Hons) (மூன்று வருடம்), B.A.,B.L. (ஐந்து வருடம்) மற்றும் B.L. (மூன்று வருடம்) படிப்புகளுக்காக தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் மே 18 முதல் விநியோகிக்கப்படும் என தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
B.A.,B.L. (Hons) (ஐந்து வருடம்), B.L. (Hons) (மூன்று வருடம்) படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 10 வரையும், B.A.,B.L. (ஐந்து வருடம்) படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 15 வரையும் மற்றும் B.L. (மூன்று வருடம்) படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 30 வரையும் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக விண்ணப்பத்தை பெற விரும்புவோர் B.A.,B.L. (Hons) (ஐந்து வருடம்), B.L. (Hons) (மூன்று வருடம்) படிப்புகளுக்கு ரூபாய் 1000 செலுத்தியும், B.A.,B.L. (ஐந்து வருடம்), B.L. (மூன்று வருடம்) படிப்புகளுக்கு ரூபாய் 500 செலுத்தியும் சட்டகல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
சட்ட கல்லூரிகள் ...
1. School of Excellence in Law (SOEL), Adyar, Chennai
2. Dr.Ambedkar Government Law College, Chennai - 104.
3. Government Law College, Madurai
4. Government Law College, Trichy
5. Government Law College, Coimbatore
6. Government Law College, Tirunelveli
7. Government Law College, Chengalpattu
8. Government Law College, Vellore
தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவோர் கூடுதலாக ரூபாய் 100 இணைத்து, The Registrar, The Tamil Nadu Dr.Ambedkar Law University, Chennai என்ற பெயரில் Demand Draft எடுத்து, பலகலைக்கழக முகவரிக்கு அனுப்பி பெறலாம். பல்கலைக்கழக முகவரி:-
The Tamil Nadu Dr.Ambedkar Law University,
"Poompozhil",
No.5, Dr.D.G.S. Dinakaran Salai,
Chennai - 600 028.
School of Excellence in Law (SOEL), Adyar, Chennai கல்லூரியில் B.A.,B.L. (Hons) (ஐந்து வருடம்) பயில (110 இடங்கள், NRI க்கு 10 இடங்கள்) - பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வில் குறைந்தது 70 சதவீதம் மதிப்புகள் எடுத்திருக்க வேண்டும். அதே கல்லூரியில் B.L. (Hons) (மூன்று வருடம்) பயில (55 இடங்கள், NRI க்கு 5 இடங்கள்) - பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வில் குறைந்தது 60 சதவீதம் மதிப்புகள் எடுத்திருக்க வேண்டும்.
பிற அரசு சட்ட கல்லூரிகள் சேர குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வில் எடுத்திருக்கவேண்டும். பிற (7) கல்லூரிகளில் B.A.,B.L. (ஐந்து வருடம்) பயில 1052 இடங்களும், B.L. மூன்று வருடம்) பயில 1262 இடங்களும் உள்ளன.
மேலதிக விபரம் பெற www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம். |