காயல்பட்டினம் ஆஸாத் தெருவைச் சார்ந்த எம்.யு.ஜஃபருல்லாஹ் என்பவரின் மகன் ஹாஃபிழ் முஹம்மத் உமர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் பயின்ற இவர், நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 1200க்கு 1158 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பாடவாரியாக இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:
தமிழ் - 183
ஆங்கிலம் - 185
கணிதம் - 197
இயற்பியல் - 195
வேதியல் - 200
உயிரியல் - 198
இம்மாணவர் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்ரஸத்துல் அஸ்ஹர் லி தஹ்ஃபீழில் குர்ஆனில் கரீம் என்ற திருக்குர்ஆன் மனனப் பயிலகத்தில் முழு குர்ஆனையும் மனனம் செய்து முடித்துவிட்டு, தனது பள்ளிக்கல்வியைத் தொடர்ந்தார்.
கடந்த 2008-2009 கல்வியாண்டில், மெட்ரிகுலேஷன் அரசு பொதுத்தேர்வில் நகரளவில் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் தேர்வெழுதி, நகரளவில் முதலிடம் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Moderator: நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில் வெளியூர் பள்ளிகளில் பயின்று, 1200க்கு 1150க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தகவல் தந்தால், அதுகுறித்து செய்தி வெளியிடப்படும். |