காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த முஹம்மத் சதக்கத்துல்லாஹ் என்பவரின் மகன் மொகுதூம் நெய்னா. இவர், கத்தர் நாட்டில் வேலைபார்த்து வந்த கம்பெனியிலிருந்து விலகி மற்றொரு இடத்தில் வேலையில் சேர்ந்த காரணத்தால், முன்பு வேலை பார்த்த கம்பெனியினர் செய்த புகாரைத் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டார்.
இதுபற்றி அவரது குடும்பத்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையிடம் முறையிட்டனர். மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. ஆகியோர் உடனடியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹமது கவனத்திற்கு இதனைக்கொண்டு சென்றனர்.
இ.அஹமது முயற்சியில் கந்தார் சிறையிலிருந்து மொகுதூம் நெய்னா விடுதலை செய்யப்பட்டு, கடந்த 03ஆம் தேதியன்று அவரது சொந்த ஊரான காயலபட்டினம் வந்துள்ளார்.
இதற்காக அவரது குடும்பத்தினர் இ.அஹமதுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமைக்கும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
தகவல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்திலிருந்து,
உஸ்மான்,
மண்ணடி, சென்னை. |