தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நாளை (மே 15) நண்பகல் 12.15 மணியளவில் பதவியேற்க உள்ளார்.
முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சி எம்எல்ஏ-க்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெயலலிதாவை அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் போயஸ் தோட்டம் சென்றனர்.
பின்னர் ஆளுநரைச் சந்தித்த ஜெயலலிதா, அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மான நகலை அவரிடம் அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து முதல்வராகப் பதவியேற்குமாறு ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்தார்.
ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா நாளை நண்பகல் 12.15 மணியளவில் முதல்வராகப் பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1. Best wishes posted bysyedahmed (china)[15 May 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 4462
BEST WISHES TO OUR NEW CM DR.J.JAYALALITHA. HOPE OUR TAMILNADU IS GOING TO GET DEMOCRATIC REVOLUTION WITHOUT ANY POVERTY LINE. NO DOUBT TO REALISE OUR LONG TIME DESIRE UNDER HER STRONG ADMINISTRATING LEVEL & GOOD REGIME.
2. OUR BEST WISHES TO AMMAA! posted bykavimagan kader & friends (DUBAI)[15 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4463
பல்லாயிரம்கோடி பணபலமும், அதிகாரவர்க்கத்தின் ஆணவமும்,
கயமைத்தனமும், கருணாநிதியின் கணக்கற்ற சூழ்ச்சிகளும்,ஒரு
குடும்பத்தின் சுயநல வெறியும் மாபெரும் மக்கள் சக்தியால், தலை
எடுக்க முடியாத அளவிற்கு வீழ்த்தப்பட்டிருக்கிறது.
வெறும் வார்த்தை ஜாலங்களால் வாயளந்தவர்கள், ஜனநாயகத்தின் அதீத சக்தியால் செயல் இழந்து நிற்கின்றார்கள். தேர்தலுக்குப்பின் அண்ணா.தி.மு.க இருக்காது என்று சொன்ன அழகிரி என்னும் அரசியல் அராஜகவாதி இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது.
நிர்வாகத்திறனும், மன உறுதியும் கொண்ட அம்மா அவர்களே!
உங்களது நல்லாட்சியில் தமிழகம் மீண்டும் செழிக்கட்டும். உங்களது
பொற்கால ஆட்சி மலர, தமிழக முஸ்லிம்களது ஆதரவு, முதன்முறையாக அலைபோல் ஆர்த்தெழுந்து வந்திருப்பதை, நெஞ்சத்தில் ஏந்தி, எங்களது சமுதாய நலனுக்காக, நீங்கள் நேசக்கரம் நீட்ட வேண்டும் என்ற வேண்டுகோளோடு, உங்களை வாழ்த்தி மகிழ்கின்றோம்.
3. சசிகலா குடும்பத்தினர் தலையீடு posted byS.M. Hassan Moulana (Kuwait)[15 May 2011] IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 4465
ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா குடும்பத்தினரின் அட்டூழியம் இல்லாமல் இருந்தால் மட்டுமே அது நல்லாட்சியாக அமையும். இல்லையேல் DMKயை விட மோசமாக இருக்கும். அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.
4. மனமார்ந்த வாழ்த்துக்கள்... posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[15 May 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4470
தமிழக மக்கள் உங்கள் மீது மிகப் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். உங்களின் கடந்த கால தவறுகளை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பார்ப்பில் தான் உங்களுக்கு இப்படி ஒரு மகத்தான வெற்றியை அளித்திருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் நடந்த அத்தனை அட்டூழியங்களுக்கும் என்று விடிவு என்று காத்திருந்து, தங்கள் கோபத்தை அதிமுகவுக்கு வாக்களித்ததன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த வாக்குகளும், அடுத்த ஐந்தாண்டுகள் உங்களுக்கு வழங்கப் பட்டுள்ள ஆட்சியும், தமிழக மக்களுக்குச் சொந்தமானது. இந்த மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
மக்கள் நலனைப் பேணும், நல்லாட்சி வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு, நாளை மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ள உங்களுக்கு என் சார்பாகவும், அல்-கோபர் தேமுதிக கிளை சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
5. அ.இ.அ.தி.மு.க-வும் ஏதோ புனிதமான கட்சியல்ல posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[15 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4471
பெருவாரியான வாக்குகளை அளித்து தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க-வும் ஏதோ புனிதமான கட்சியல்ல. மக்களுக்கு மாற்று வழி இல்லாததால் தங்களின் கோபதாபத்தை எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.க-வுக்கு வாக்குகளால் அளித்து தீர்த்துக்கொண்டனர் என்றே சொல்லலாம். ஏனெனில் அ.இ.அ.தி.மு.க-வின் கடந்தகாலம் சர்வாதிகாரமும், பாசிச தொடர்பும்,ஊழலும், மக்கள் விரோத கொள்கைகளாலுமே நிறைந்துள்ளது.
மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை செல்வி.ஜெயலலிதா எடுக்காவிட்டால் வாக்களித்த பலனை தமிழக வாக்காளர்கள் வருகிற 5 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர்.
பதவி ஏற்புக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அழைப்பாரா? புதிய தமிழக முதல்வர்?
7. கூட்டி கழித்தால் சரியாக வருதா posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[15 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4474
அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.
என்ன சகோதரர்கள். கவிமகன், முத்துவாப்பா அவர்களே சந்தோசம் தானே...
விஜயகாந்த், வைகோ போன்றவர்கள் மூன்றாம் அணி உண்டுபண்ணி இருந்தால் அவ்வளவுதான். ஆகவே அம்மா இவர்களுக்கும் நன்றி சொல்லணும். கூடவே நீதமாக நடந்த அதிகாரிகளுக்கும் கூட.
அம்மாவின் ராசி எண் 9. அவர் பதவியேற்பு நேரம் 12.15 (1+2+1+5=9). கூட்டி கழித்தால் சரியாக வருதா.. இன்னும் பல கூத்துகளை பார்க்கலாம்.
கவிமகன் அவர்களே ! நான் எந்த கட்சியும் இல்லை என்று நீங்கள் சொன்ன போதல்லாம் எனக்கு சந்தேகம்தான். அம்மாவோட ஆளா இருப்பாரோ என்று! வுங்களுடைய இந்த கவி வரிகளை அம்மா வாசிக்க நேர்ந்தால் துபாயில் இருக்க மாட்டீர்கள். ஆஹா! என்னே அடுக்கு வரிகள். வயற்றில் இருந்து வந்த வரிகள் அல்லவா! ஆமா... அம்மா ஜெயித்ததில் கவிமகனுக்கு ஏன் இந்த குளிர்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross