நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் காயல்பட்டினம் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர் விபரங்கள் பின்வருமாறு:-
நகரளவில் முதலிடம்:
காயல்பட்டினம் 19, பிரதான வீதி, எட்டுக்கடை வீடு என்ற முகவரியைச் சார்ந்த அபுல்ஹஸன் – யஹ்யா பீவி ஆகியோரின் மகனும், எல்.கே.மேனிலைப்பள்ளியில் பயின்றவருமான மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று நகரளவிலும், தூத்துக்குடி மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:
தமிழ் - 188
ஆங்கிலம் - 191
கணிதம் - 200
இயற்பியல் - 199
வேதியல் - 199
உயிரியல் - 200
மொத்த மதிப்பெண்கள் - 1200க்கு 1177.
நகரளவில் இரண்டாமிடம்:
காயல்பட்டினம் அலியார் தெருவைச் சார்ந்த கே.எம்.ஷேக் தாவூத் - ஒய்.எம்.ஆஸியா மர்யம் ஆகியோரின் மகனும், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவருமான எஸ்.டி.முஹம்மத் அஃப்ரஸ், 1200க்கு 1159 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:
தமிழ் - 189
ஆங்கிலம் - 188
கணிதம் - 199
இயற்பியல் - 199
வேதியல் - 197
உயிரியல் – 187
மொத்த மதிப்பெண்கள் – 1200க்கு 1159
நகரளவில் மூன்றாமிடம்:
காயல்பட்டினம் பிரதான வீதியைச் சார்ந்த சொளுக்கு எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதர் - நஃபீஸா ஆகியோரின் மகளும், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியுமான சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு ஸரீஹா, 1200க்கு 1143 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:
தமிழ் - 191
ஆங்கிலம் - 178
கணிதம் - 197
இயற்பியல் - 192
வேதியல் - 196
உயிரியல் – 189
மொத்த மதிப்பெண்கள் – 1200க்கு 1143
தகவல் உதவி:
A.T.ரியாஸ்தீன்,
Y.M.முஹம்மத் தம்பி (AKM Jewellers),
A.K.ஜவாஹிர்,
M.A.C.செய்யித் முஹம்மத்
காயல்பட்டினம். |