தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி முடிவுற்று, மே மாதம் 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 16ஆம் தேதியன்று, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்றது.
இத்தேர்தலின்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்புற பணியாற்றியமைக்காக, மாவட்ட நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள், அனைத்து துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தேர்தல் தலைமை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் 17.05.2011 அன்று (நேற்று) பாராட்டு தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் துரை இரவிச்சந்திரன், திட்ட இயக்குனர் சி.க.வீரனன் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். |