ஹஜ் பயணத்துக்காக தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஹஜ் பயணத்துக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சுமார் 10,470 (+7 குழந்தைகள்) விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள மத்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, புனிதப் பயணம் செல்பவர்களைத் தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குலுக்கல் நிகழ்ச்சி மே 24ஆம் தேதி, காலை 10.00 மணியளவில், சென்னை ராயப்பேட்டை, புதுக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள ஹஜ் பயணிகள், இக்குலுக்கலில் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
தினமணி (17.05.2011) |