பஹ்ரைன் காயல் நல மன்றம் (BAKWA) பக்வா செயற்குழு கூட்டம்.
பஹ்ரைன் காயல் நல மன்றத்தின் செயற்குழு கூட்டம் 13.05.2011 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவில் மன்ற செயலாளர் ஜனாப் ஏ.ஹெச்.செய்யது முஹியத்தீன் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மன்ற தலைவர் ஹாஜி எஸ். மஹ்மூது நெய்னா அவர்கள் தலைமை தாங்கினார்கள். நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் எம். ஒய். அபு ஹமீத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள். நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப்; அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். ஜனாப் வி.எஸ்.எஸ்.ஜாஹிர் உசேன் பொருளாளர் அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசித்தார்கள்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏழை பிள்ளைகள் 20 பேருக்கு இக்ரா மூலமாக சீருடை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
1. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போல் ரூபாய் 15,000.00 இக்ரா மூலமாக கல்வி உதவி செய்வது என்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
2. துணைத்தலைவர் ஜனாப் வஜ்ஹுத்தீன் இஸ்மாயில் அவர்கள் பஹ்ரைனில் இருக்கும் காலம் வரை பக்வா மன்றத்திற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
3. 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்ற பள்ளிக் கூட மாணவ, மாணவி மற்றும் அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் விற்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் எம்.டி.செய்யது இப்ராஹீம் அவர்களின் நன்றி உரைக்குப் பின் துஆ உடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross