செய்தி எண் (ID #) 6247 | | | வியாழன், மே 19, 2011 | அரசு கல்லூரிகளில் Diploma in Nursing பயில ஆண்டு கட்டணம் ரூபாய் 200! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2372 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
தமிழகத்தில் 27 அரசு கல்லூரிகளில் Diploma in Nursing பயில 1875 இடங்கள் உள்ளன. அவைகள் Category 1 (Stipendiary) என்றும், Category 2 (Non-Stipendiary) என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. Category 1 பிரிவில் 645 இடங்களும், Category 2 பிரிவில் 1230 இடங்களும் உள்ளன.
இதில் Category 1 பிரிவில் பயில அரசு மாத உதவித்தொகை வழங்குகிறது. மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. முதல் ஆண்டு உதவி தொகை மாதத்திற்கு ரூபாய் 400 ம், இரண்டாம் ஆண்டு உதவி தொகை மாதத்திற்கு ரூபாய் 440 ம், மூன்றாம் ஆண்டு உதவி தொகை மாதத்திற்கு ரூபாய் 480 ம் வழங்கப்படுகிறது.
Category 2 (Non-Stipendiary) பிரிவில் பயில மாணவர்கள் ஆண்டுக்கு ரூபாய் 200 செலுத்த வேண்டும். மேலும் மாணவர் விடுதி கட்டணம் ரூபாய் 20 ம் ஒவ்வொரு மாதமும் கட்டவேண்டும். |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|