புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயல்பட்டுவந்த தமிழக சட்டசபை - புதிதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கால் துவக்கிவைக்கப்பட்டது.
சுமார் 1000 கோடி ரூபாயில் - ECCI நிறுவன மேற்பார்வையில் - கட்டப்பட்டுவரும் இவ்வளாகத்துக்கு பதிலாக, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து சட்டசபை செயல்படும் என தகவல்கள் தெரிவித்தன. புதிய இடத்திற்கு சட்டசபை மாறிய பின் அங்கு செயல்படத்துவங்கிய நூலகத்தினை இடமாற்றம் செய்யும் பணிகள் கடந்த சிலநாட்களுக்கு முன் முடுக்கிவிடப்பட்டன.
இதற்க்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதிகளான நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் மற்றும் நீதிபதி கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன் இவ்விசயம் குறித்து வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தது. ஜி. கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்குறைஞர் தொடுத்துள்ள இவ்வழக்கில் - 1000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ள புது வளாகத்துக்கு பதிலாக, பழைய வளாகத்தில் சட்டசபையை மீண்டும் கூட்டுவது மக்கள் பொருள் விரயம் என்று தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் அரசுக்கு நோட்டீஸ் வழங்கி வழக்கினை ஜூன் 15க்கு தள்ளிவைத்தனர்.
1000 கோடி ரூபாய் செலவில் மக்கள் பணத்தில் கட்டிய இம்மாமன்றத்தைக் கால்நடை மருத்துவமனையாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை! அம்மாவின் பிடிவாத குணம் எல்லோருக்கும் தெரிந்ததே! அப்படியானால் தி.மு.க.ஆட்சியில் கட்டப்பட்ட பல அரசாங்க கட்டிடங்களையும் அம்மா மாற்றிவிட முற்படுவார்களா என்ன? மொத்தத்தில் மக்கள் பணம் மண்ணாகிப் போவது உறுதி!!! இது ஓர் ஆரம்பம் மட்டும்தான். இனிதான் அம்மாவின் சுயரூபம் வெளிப்படும்...?
தி மு க ஆட்சியில் எத்தனையோ பாலங்கள் கட்டப்பட்டன அதையும் இந்த அம்மணி உபயோக படுத்த கூடாது, நாய் வாழ நிமித்த முடியாததுக்கு அம்மணி ஒரு உதாரணம், இது ஆரம்பம்தான் போக போக இவரின் திருவிளையாடல் ஆரம்பம் ஆகும்.
3. குரங்கு புத்தி........! posted byzubair (riyadh)[20 May 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4558
நாட்டிற்கு நல்லது செய்ய எத்தனையோ விசயம்கள் காத்திருக்க... எடுத்தேன் கவிழ்தினேன் என்பதையே குறிக்கோளாக கருதி அஹகாரத்தின் மொத்த உருவமாக திகழ்கிறார். இதுதான்... பெண்களுக்கு அதிகாரம் கொடுத்தாள் இப்படித்தான் இருக்கும். கோண எலும்பால் படைக்க பட்டது தானே!!! எல்லாமே கோணலாகத்தான் சிந்திக்கும். பலதரப்பட்ட (நற் சிந்தனை) ஆட்களின் உபதேசமும் ஜெ யின் காதில் விழுந்தும் இந்த முடிவை எடுத்திருப்பது என்னுடைய தலைப்பிற்கு ஜெ சொந்தக்காரர்.
4. குடிமையியல் posted byIbrahim (Chennai)[20 May 2011] IP: 58.*.*.* India | Comment Reference Number: 4560
பள்ளி பருவங்களில் குடிமையியல் பிரிவில் அரசு பற்றி படித்த வரிகள் நினைவுக்கு வருகிறது.
அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் உள்ளது போன்று இரண்டு அரசாங்கம், அரபு நாடுகளில் உள்ளது போன்ற ஒற்றை அரசாங்கம் மற்றும் இந்தியா போன்ற பல அரசாங்கம் கொண்ட நாடுகளில் உள்ள சாதக பாதக அரசு நிர்வாகங்களால் மக்கள் பெரும் லாபமும் நஷ்டமும் என்ற ஒரு குறுகிய தலைப்பு.
If two parties rejoin. The people suffer in America.
If the King dictates. The people suffer in Gulf.
If the multi parties increases. The people suffer in Developing nations.
இந்த வரிகள் நமக்கு உணர்துவது, எந்த முறையான அரசாங்கம் இருந்தாலும் அல்லல் படுவது மக்கள்தான்.
5. மருமகள் உடைத்தால் பொன்குடம்! posted bykavimagan (dubai)[20 May 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4565
ஒரு குறிப்பிட்ட கோயிலில் பூஜை செய்துவிட்டு பிரச்சாரத்தைத் துவங்கும் மைதீன்கான், லாட்டரி மற்றும் குதிரை ரேஸ் வியாபாரி இதயத்துல்லாஹ் ஆகியோர் ஐந்தாண்டு காலம் அமைச்சர்களாக இருந்தபோது, முஸ்லிம் பெயர்தாங்கிகள் என்று யாரும் சொல்லவில்லை. இவர்கள் கண்ணுக்கு மரியம் பிச்சை முஸ்லிம் பெயர்தாங்கி.
நரேந்திரமோடியை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கருணாநிதியின்
கைக்கூலிகள் ஆதரித்தபோது முஸ்லிம் விரோதப்போக்காக யாருக்கும் தெரியவில்லை. பதவியேற்பு விழாவிற்கு ஜெயா அழைத்தபோது தாம் தூம் என்று குதிக்கின்றார்கள்.
உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற மிகச்சிறந்த திட்டத்தை ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். தேசத்தின் மிகச்சிறந்த திட்டம் என்று உச்ச நீதிமன்றத்தால் பாராட்டப்பட்ட திட்டத்தை, கருங்குரங்குப்புத்தி கொண்ட கருணாநிதி, தனது ஆட்சியில் தூக்கி எறிந்தார். இன்னும் எத்தனையோ நல்லபல திட்டங்களை கைவிட்டார்.
பழைய தலைமைச்செயலகத்தில் முதல்வராகத் தொடர்நதால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று மதுரையைச் சேர்ந்த ஒரு நாடி ஜோதிடர் கருணாவிடம் சொன்னதாக ஜு.வி.யில் செய்தி வந்த பத்து நாளைக்குள் புதிய செயலகம் நானூறு கோடி செலவில் கட்டப்படும் என்று, இந்தப் பகுத்தறிவுச் சிங்கம் பறைசாற்றியது. அதை ஒரு குறிப்பிட்ட தினத்தில் முடிக்க வேண்டும் என்று ஜோதிடர் சொன்னார் என்பதற்காக, வேகவேகமாக பணிகளை முடுக்கிவிட்டு, நானூறு கோடி என ஆரம்பித்தது ஆயிரத்து
நூறு கோடியில் போய் முடிந்தது.
இதை விடவும் கேவலம் என்னவென்றால், அழுகிய முட்டை போல காணப்படும் இந்த அலங்கோல கட்டடத்தின் திறப்பு விழாவின்போது, ஓட்டை உடைசல்களை மறைத்திட, தோட்டதாரணி என்ற சினிமாக்கலைஞரை வைத்து இரண்டுகோடி ரூபாய்க்கு செட் போடப்பட்டது.
மூடநம்பிக்கையின் மொத்த உருவமாகத் திகழும் இந்தக் கட்டிடத்தை நான் ஆட்சிக்கு வந்தால், தலைமைச் செயலகமாக பயன்படுத்த மாட்டேன் என்று பகிரங்கமாக மக்கள் மத்தியில் அறிவித்து ஆதரவு கேட்ட ஜெயாவுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஏகோபித்த ஆதரவை அளித்ததால், மக்கள் மன்றத்தில்
சொன்னதை இப்போது செய்கிறார். உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை, அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என அறிவித்துள்ளார்.
கருணாநிதியின் ஐந்தாண்டு கால அலங்கோல ஆட்சியில் தமிழகமே சுடுகாடு ஆகிவிட்டது. குரங்குப் புத்தியால் விளைந்த கேடுகளைக் களைந்திட அம்மாவின் குரங்குப் புத்தியால் மட்டுமே முடியும்.
பொறுத்திருந்து பாருங்கள் தோழர்களே! விளையாட்டு இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறது.
6. விளையாட்டு இப்பம் தான் ஆரம்பம்.... posted byzubair (riyadh)[21 May 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4579
பல,பல விளையாட்டுக்களை ஆடிக்கழைதவர் கருணாநிதி. ஒரு பெண்ணுக்கு இருக்க கூடாத எல்ல குணமும் இவரிடம் நிறைத்து கிடக்கின்றன. மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்து இருக்கிறார்களே தவிர ஜெ வை நம்பி அல்ல.
நரேதிர மோடியை நடுநிலையாளர் யாரும் ஏற்கமாட்டார்கள். ஜெ செய்தது தவறு என்று சொல்வதை விட்டுவிட்டு ஏதேதோ ஒப்பிட்டு பேசுகிறார் நம் கவிமகன்.
கருணாநிதியின் ஸ்போர்ட்ஸ் இந்தவாரத்தில் இருந்து துடங்கும்.
8. DEAR MR.MOHUDOOM! posted bykavimagan (dubai)[21 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4616
அருமைச் சகோதரர் மக்தூம் அவர்களே!
தாயின் காலில் விழுவதையே ஏற்றுக்கொள்ளாத ஓர் உன்னதமான மார்க்கத்தில்
பிறந்துவிட்டு,காலில் விழும் கேடுகெட்ட கலாச்சாரத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ள
முடியும். ஜெயலலிதா என்பவர் ஒரு ஹிந்து.அவர்களது கலாச்சாரமே காலில்
விழுந்து வணங்குவதுதான்.செய்யத் கான் என்பவன் ஒரு முஸ்லிம்.காலில்
விழுந்தது இந்த நாயின் தப்பு.இவன் செய்யும் தவறுக்காக ஜெயா என்ன செய்வார்?
9. ஜெயா மாற மாட்டார் posted bymohammed (saudi arabia)[22 May 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4639
கவி மகன் அவர்களே , தன் காலில் விளுவதை தான் ஜெயா விரும்புகிறார். பெருமையும் படுகிறார். ஜெயா ஒன்னும் உத்தமி இல்லை. ஜெயா மீதும் இன்னும் பல வழக்குகல் உள்ளது. பல வழக்குகளில் தண்டனையும் பெற்று உள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross