தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகளுமான கனிமொழி இன்று கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று விசாரணைக்கு வந்த ஜாமீன் வழக்கில் தீர்ப்பினை வழங்கிய சி.பி.ஐ. நீதிமன்றம், கனிமொழி மற்றும் கலைஞர் தொலைகாட்சி நிர்வாக இயக்குனர் சரத் குமார் ஆகியோரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.
2G spectrum வழக்கில் முன்னதாக சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை ஏப்ரல் 25 அன்று தாக்கல் செய்திருந்தது. அதில் உள்ள குற்றச்சாட்டுப்படி - கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம், ஸாஹிது உஸ்மான் பல்வா என்பவர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பல்வாவின் நிறுவனம் Swan Telecom - 2G spectrum ஏலத்தில் லாபம் அடைந்ததாகவும், அதற்கு அப்போதைய மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஏ.ராஜா உதவி புரிந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஏ.ராஜா - பிப்ரவரி 2 அன்று கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீத பங்கும், சரத் குமாருக்கு 20 சதவீத பங்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்கும் உள்ளது. கலைஞர் தொலைகாட்சியின் அன்றாட செயல்பாடுகளில் தயாளு அம்மாள் ஈடுபடாததால் - அவர் மீது இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
6. அப்படி என்ன பெரிய தவறு பண்ணிவிட்டார். posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[21 May 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4578
என்ன கொடுமை இது.
என்னமோ அரசாங்க ஊழியர் 500 ரூபாய் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கினால் கைது பண்ணுவது மாதிரி கைது பண்ணுறது. அப்படி என்ன பெரிய தவறு பண்ணிவிட்டார்.
ஜுஜுபி காசு 214 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று டிவி சேனல் தொடங்கியது தப்பா?
ஸ்பெக்ட்ரம் நிறுவனங்களில் இருந்து லஞ்சம் வாங்கி சென்னை சங்கமம் என்று கூத்து அடிப்பது தவறா?
டாட்டா நிறுவனத்தை மிரட்டி, வோல்டாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடத்தை லஞ்சமாக பெற்றது, ராங்கா..
மக்களின் சொத்தை கொள்ளை அடிப்பது என்ன பெரிய மிஸ்டேக்கா..
இன்னும் ஒரு தகவல் தெரியுமா... புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டியதிலும் ஊழலாம், காத்துவாக்கில் செய்தி கசியுது.
ஆகவே தயாராக இருங்க. எதுக்கா...?
கூடிய விரைவில் இந்திய தொலைக் காட்சியில் இரண்டாம் முறையாக "கொல்றாங்கோ..கொல்றாங்கோ... கொலை பண்றாங்கோ" என்ற வசனத்தை கேட்க்கத்தான்.
7. பொறுத்திருந்து பார்ப்போம்! posted byjamal (colombo)[21 May 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 4580
எது தர்மம்? எது சூது? என்று போகப் போகத் தெரியும்.
எத்தனைப் பேரை பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளியிருப்பார்கள்? தன் மகள் என்றவுடன் செய்யாத குற்றத்திற்கு தண்டனை என்று ஒப்பாரி வைக்கிறார். தன் வினை தன்னையே சுடும். ஆனால் இதற்கெல்லாம் ஜெயலலிதா காரணமில்லை. அரசியலுக்கா அவரையே காரணம் என்று சொன்னாலும் சொல்லுவார்? பாழாய் போன அரசியல். பொறுத்திருத்திருந்து பார்ப்போம்.
9. இதயம் இனித்தது, மாங்காய் புளித்தது posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[21 May 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4588
கலைஞர் அவர்களே " இதயம் இனித்தது, மாங்காய் புளித்தது"என்ற வசனத்தை இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்.
இப்பொழுது மட்டும் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மன்னிக்கவும் அதாவது கனிமொழியின் அம்மாவுக்கும் இதயம் வலிக்கும். ஏன் உங்களுக்கு மட்டும் தான் இதயம் இருக்கின்றதா எங்களுக்கு எல்லாம் இல்லையா...? எங்கள் சமுதாய அப்பாவி சகோதர்களை கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் வைத்து பின் நிரபராதி என்று விடுதலை செய்தாயே அப்பொழுது எங்கள் இதயம் வலிக்காதா....?
நிதி நிதி என்று
மதி இழந்தீரே
கதி என்னாயிற்று பார்த்தீர்களா..
நிதியே..!! கருணாநிதியே....
மணிக்காக ஆசைப்பட்டு
பிணி கொண்ட வயதிலும்
துணி(வு) கொண்டு செய்த ஊழளால்
உங்களால் நாசமாய் போனது செம்மொழி மட்டுமல்ல
உங்கள் மகள் கனிமொழியும் தான்...
12. ஜெயா உத்தம புத்திரியா ? posted byMOHAMMED (saudi arabia)[22 May 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4636
ஜெயா என்ன உத்தம புத்திரியா ? ஜெயா வின் மீதும் வழக்குஹல் இல்லையா ? ஜெயா குற்றமே செய்யவில்லையா ? இப்போது ஜெயாவின் பக்கம் புயல் அடித்ததாள் ஜெயா வந்து உள்ளார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross