ஹஜ் யாத்திரை குறித்த விளக்கப்படம் குறித்து இந்திய ஹஜ் குழு (Haj Committee of India) வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இந்திய ஹஜ் குழு (Haj Committee of India) சார்பாக Visual Concepts (சோயேப் சௌதரி) என்ற நிறுவனம் ஹஜ் யாத்திரிகர்களுக்கு விளக்கப்படம் ஒன்று தயாரிக்கவுள்ளது.
அவ்விளக்கப்படம் சவுதி அரேபியா நாட்டிற்கு ஹஜ் யாத்திரை மேற்க்கொண்டுள்ளவர்கள் - தாங்கள் அந்நாட்டில் இருக்கும் 40 நாட்களில் செய்ய அனுமதிக்கப்பட்டது, செய்ய அனுமதிக்கப்படாதது குறித்தும், ஹஜ் செய்யும் முறை குறித்த காட்சி மூலம் விளக்கங்கள் போன்ற அம்சங்களையும் தாங்கியிருக்கும்.
விளக்கப்படம் சரியான முறையில் அமைய அதன் தயாரிப்பை மார்க்க அறிஞர்களும், ஹஜ் குழு நிர்வாகிகளும்
கண்காணிக்க உள்ளனர்.
இவ்விளக்கப்படத்தினை குறுந்தகுடு (CD) மூலம் யாத்திரிகர்களுக்கு விநியோகிக்கவும், தொலைக்காட்சிகளில் திரையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்க்கான நிதி ஆதாரத்தை Visual Concepts நிறுவனம் - நன்கொடை மூலமும், விளம்பரதாரர்கள் மூலமும் பூர்த்திசெய்ய எண்ணியுள்ளது.
ஒரு இஸ்லாமியரின் வாழ்வில் ஹஜ் என்பது மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். ஆகவே விளம்பரதாரர்கள் ஹஜ் குறித்த இவ்விளக்கப்பட திட்டத்தில் அங்கம் வகித்து - பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்.
இது குறித்த ஆலோசனைகளையும், அதிக விபரங்களையும் கீழ்க்காணும் எண்களுக்கு தொடர்புக்கொண்டு வழங்கலாம்/பெறலாம்.
1. சோயேப் சௌதரி (Visual Concepts)
91-9820094917
91-9873321459
2. அன்வர் கட்டாவ் (Haj Committee of India)
+91-9867719158
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|