இந்தக் கல்வியாண்டு முதல் முழுவதுமாக நடைமுறைக்கு வரயிருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பாடத் திட்டத்தையே தொடர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இலலை என்றும், சமச்சீர் கல்வித் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள தமிழக அரசு, பள்ளிகள் பழைய பாடத் திட்டத்தையே தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பழைய பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், ஜூன் 15ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1. அட என்னமோ பண்ணுங்கப்பா posted byIbrahim (Salem)[22 May 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 4635
அட நீங்க அது சரியில்லை இது சரியில்லை என்று என்னமோ பண்ணுங்கப்பா. குழந்தைகளுக்கு விடுமுறை அளித்தால் போதும். அவர்கள் ஜாலியாக இருப்பார்கள்.
ஒரே டியூசன் அத படி இத படின்னு இந்த பெற்றோர்கள் குழந்தை முதுகுகளில் ஒரு கனத்த பைய மாடிவிற்றுங்க.
நத்தை மாதிரி குழந்தைகள் நடக்குறாங்க. அதுக்கு எதாச்சும் ஒரு வழி பண்ணுங்கப்பா...
இதுல வேற இந்த ஆசிரியைகள் புத்தகத்தில் உள்ளது போல எழுதினால் தான் மதிப்பெண் கொடுப்பேன் என்று அடம்பிடிகிறாங்க. அவர்கள் எளிதாக விடைத்தாள்களை திருத்துவதற்கு இந்த யுக்தி. குழந்தைகளை சுயமாக சிந்திக்க விடுங்கள். நமக்கும் தெரியாத ஒன்று அந்த குழந்தைகளில் மூளைகளில் தோன்றும்.
2. பூனைக்கு தப்பி புலியின் வாயில் மாட்டி கொண்டோமோ ? posted bySalai Sheikh Saleem (Dubai)[22 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4637
அம்மாவின் அட்டூழியங்கள் ஆரம்பிச்சாச்சு. யாரை குறை சொல்லுவது ? ஏதோ ஒரு விலங்கிடம் இருந்து தப்பி இன்னுமொரு ஆபத்தான விலங்கிடம் மாட்டிய கதைதானோ? இதோடு நிற்கப்போவது இல்லை இன்னும் தி மு க ஆட்சியில் ஆரம்பித்து வைத்த நல்ல பல மக்கள் திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடுவார்களே. நம் காசிற்க்கே மரியாதை இல்லையா? இதற்க்கெல்லாம் நாம் தானே காரணம். இந்த கொள்ளைக்காரர்களிடம் இருந்து எப்போது கிடைக்கும் சுதந்திரம்? நீங்கள் எல்லோரும் "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" என்று முனங்குவது எனக்கு விளங்காமல் இல்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross