ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல் மாணவர் நல மன்றம் கஸ்வா சார்பில், நடப்பாண்டு ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், நகரளவில் இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்ற மாணவர் எஸ்.டி.முஹம்மத் அஃப்ரஸ், சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு ஸரீஹா ஆகியோருக்கும், உளவியல் பாடத்தில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள மாணவி ஆர்.முத்துமாரிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடப்பாண்டு ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், நகரளவில் இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்ற மாணவர் எஸ்.டி.முஹம்மத் அஃப்ரஸ், சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு ஸரீஹா ஆகியோரையும், உளவியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள மாணவி ஆர்.முத்துமாரியையும் எமதமைப்பின் சார்பில் மனதாரப் பாராட்டுகிறோம்.
அத்துடன், எமதமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் காயல்பட்டினம் நகர பள்ளிக்கூடங்களில் பயின்று முதலிடம் பெறும் மாணவருக்கு வழமைபோல மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக வழங்கப்பட்டு வரும் ரூபாய் ஐந்தாயிரம் பணப்பரிசு இவ்வாண்டு மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு இன்ஷாஅல்லாஹ் விரைவில் வழங்கப்படவுள்ளது.
சிறப்புத் தேர்ச்சி (மெரிட்) மூலம் professional / technical படிப்புகளுக்கு சேர்க்கை பெற்று, குடும்ப பொருளாதார நலிவு காரணமாக படிப்பில் சேரத் தயங்கும் காயல்பட்டினத்திலுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் 1998ஆம் ஆண்டு துவக்கப்பட்ட காயல் மாணவர் நல மன்றம் - கஸ்வா அமைப்பின் ஏற்பாட்டில்,
ஒரு எம்.இ. பொறியியல் பட்டதாரி,
பி.இ. பொறியியல் பட்டதாரிகள் 15 பேர்,
பல் மருத்துவர் - பி.டி.எஸ். ஒருவர்,
பி.ஃபார்ம் படிப்பில் ஒருவர்
என இதுவரை 19 மாணவர்களுக்கு அவர்களின் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் என அவர்கள் படிக்கும் அனைத்து ஆண்டுகளுக்கும் தேவைப்படும் முழுச் செலவுகளுக்கும் கஸ்வா சார்பில் முழுப் பொறுப்பும் ஏற்கப்பட்டு, இறையருளால் அவர்கள் இன்று தமது கல்விக்காலத்தை தங்குதடையின்றி பூர்த்தி செய்து, தமது குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர்.
தற்சமயம்,
எம்.பி.பி.எஸ். படிப்பில் ஒரு மாணவர்,
எம்.டெக். படிப்பில் ஒரு மாணவர்,
பொறியியல் படிப்பில் ஐந்து மாணவர்கள்,
பி.டெக். படிப்பில் ஒரு மாணவர்
என மொத்தம் 8 மாணவர்கள் கஸ்வாவின் முழு அனுசரணையில் கல்வி கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Professional Courses கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு:
நடப்பாண்டில் ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, professional courses படிப்பில் சேர மெரிட் மூலம் சேர்க்கை பெற்றுள்ள, காயல்பட்டினத்தைச் சார்ந்த - பொருளாராத்த்தில் நலிவுற்றுள்ள மாணவர்கள் தமது கல்வி உதவித்தொகைக்காக கஸ்வாவிடம் விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கஸ்வா செயற்குழு உறுப்பினர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கஸ்வா அமைப்பின் சார்பாக,
செய்யித் மஹ்மூத்,
கவ்லூன், ஹாங்காங். |