அ.தி.மு.க. அமைச்சரவையில் சுற்றுப்புற சூழல், மாசு கட்டுப்பாடு மற்றும் வக்ப் உட்பட சிறுபான்மை துறை அமைச்சராக இடம்பெற்ற என். மரியம் பிச்சை நேற்று சாலை விபத்து ஒன்றில் காலமானார்.
இறந்த மரியம் பிச்சைக்கு வழங்கப்பட்டிருந்த இலாக்காக்கள் தற்போது தாம்பரம் தொகுதி அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர் டி.கே.எம். சின்னையாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. சின்னையா ஏற்க்கனவே பிற்படுத்தப்பட்ட சமுதாய துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவருக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள துறைகளையும் சேர்த்து பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மற்றும் சுற்றுப்புற சூழல் துறை அமைச்சர் என இவர் இருப்பார் என்று இன்று வெளியான ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
3. முஸ்லிம் அமைச்சர் இல்லை posted byMohudoom (Kuwait)[24 May 2011] IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 4686
இப்போது தமிழகத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சரும் இல்லை, ஏன் இந்த மந்திரி பதவியை முஸ்லிம் எம்.எல்.ஏக்கு அம்மணி ஏன் கொடுக்கவில்லை? 2 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.
4. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை... posted bys.s.md meera sahib (riyadh)[24 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4690
நம் முஸ்லிம் எம்.எல்.ஏ மரியம் பிச்சைக்கு கொடுத்த இலாகா....... நாம் அனுபவிக்கும் முன்னரே அவரின் மரணத்தை சாட்டி பிடுங்கப்பட்டுள்ளது. ஏன் மற்றொரு முஸ்லிம்கு கொடுக்க வில்லை? முஸ்லிம்கு கொடுக்காததால் மற்றொரு கேள்வியும் எழுகின்றன. முதலில் ஏன் மரியம் பிச்சைக்கு கொடுக்கபட்டது..........?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross