இவ்வாண்டு வெளியான் ரயில்வே பட்ஜெட்டில் மூத்தக்குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. அது வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே 60 வயது தாண்டியவர்களை மூத்தகுடிமக்களாக கருத்தில் கொண்டு, அவர்கள் பயண சீட்டில் - ஆண்களுக்கு 30 சதவீதம் சலுகையும், பெண்களுக்கு 50 சதவீத சலுகையும் வழங்கிவந்தது.
நடப்பு பட்ஜெட் தாக்கலின்போது பெண்களை பொறுத்தவரை 58 வயதை அடைந்தவரை மூத்த குடிமக்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. சலுகை சதவீதத்தில் எந்த மாற்றமும் செயப்படவில்லை.
ஆனால் ஆண்களுக்கான சலுகை 30 சதவீதத்தில் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டது.
இன்றைய அறிவிப்பின்படி இச்சலுகைகள் ஜூன் 1 முதல் அமலுக்குவரும். ஜூன் 1 பிறகு பயணம் செய்ய முன்னரே பதிவு செய்த டிக்கெட்களுக்கு இச்சலுகை வழங்கப்படாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross