சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 25ஆம் பொதுக்குழு கூட்டம், இன்ஷா அல்லாஹ வரும் ஜுன் 3 ஆம் திகதி வெள்ளி மாலை ௦௦05:30 மணிக்கு ஜித்தா ஷரஃபிய்யா இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து அம்மன்ற நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்... இறையருளால், இம்மடல் தங்கள் யாவரையும் சீரான உடல் நலமுடனும், தூய நகர்நல நோக்குடனும் சந்திக்கட்டுமாக...
நமது மன்றத்தின் 25 ஆம் பொதுக்குழு இன்ஷா அல்லாஹ வரும் ஜுன் 3 ஆம் திகதி வெள்ளி மாலை ௦௦05:30 மணிக்கு ஜித்தா ஷரஃபிய்யா இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் மன்ற உப தலைவர் ஜனாப் மருத்துவர் எம்.ஏ, முஹம்மது ஜியாது தலைமையில் நடைபெற உள்ளது.
நமதூர் மக்களின் நலன் நாடி கடந்த 8 வருடங்களுக்கு முன் நல் உள்ளங்களின் நன் முயற்சியால் இம்மன்றம் உதயமாகி அதன் மூலம் மருத்துவ நலம், உயர் கல்வி மேம்பாடு, சிறு தொழில் சேவை என நம் நகரின் முன்னேற்றத்திற்கான அனைத்து உதவிகளும் பல இலட்சம் அளவில் வழங்கியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ். இந்த அறப்பணிகள் இனிதே நிறைவேற எல்லா வகையிலும் ஒத்துழைத்து உதவிய அனைத்து கொடை உள்ளங்களுக்கும் எங்கள் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம் جزاء ك الله خيرا
எனவே, இச்செய்தியைப் படிக்கும், சஊதி அரபிய்யா - மக்கா, மதீனா, ஜித்தா, யான்பு, தபுக் பகுதிகளைச் சார்ந்த நம் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து காயலர்களும் தம் குடும்பத்தினருடன் தவறாமல் பங்கேற்க வருமாறும், தங்களுக்கு அறிமுகமான அனைத்து காயலர்களிடமும் இத்தகவலைத் தெரிவித்து, அவர்களையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யுமாறும் மேலும் நம் சகோதரர்களோடு இணைந்து நிகழ்ச்சியில் சங்கமித்து தங்களது அன்பான பங்களிப்பையும் முழுமையான ஆதரவையும் நம் மன்றத்திற்கு வழங்கி பணிகள் தொய்வின்றி நடைபெற பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டி உங்களை வாஞ்சையோடு வரவேற்கிறோம்.
இம்மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு, அன்றிரவு அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. மகளிருக்கும் தனியிட வசதி செய்யப்படுகிறது.
வல்லவன் அல்லாஹ் நமது நற்பணிகளை ஏற்றுக்கொண்டு நம்மை வெற்றியாளர்களாக ஆக்குவானாக!
மேலதிக விபரம் அறிய:
ஜனாப் சட்னி எஸ்.ஏ.செய்யிது மீரான், ஜித்தா 050 159 2134
ஜனாப் எம்.டபிள்யு.ஹாமீது ரிஃபாய், யான்பு 050 802 0486
குறிப்பு: நமது மன்றம் தயாரித்த "புற்றுக்கு வைப்போம் முற்று" குறும்பட காணொளி காட்சி மற்றும் குறும்பட விநியோகம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அந்த அழைப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்,
எஸ்.ஏ.செய்யிது மீரான்
செயலாளர்,
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா.
|