தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 486 உள்ளன. இந்த கல்லூரிகளில் ஏறத்தாழ 2 லட்ச இடங்கள் உள்ளன.
இதில் அரசு இட ஒதுக்கீட்டில் உள்ள 1 லட்சத்து 23 ஆயிரம் இடங்களுக்கு அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும்,
அரசு இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் 2 லட்சத்து 20 ஆயிரம் அச்சடிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் மே மாதம் 16ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல் நாளான மே 16 அன்று 88,774 விண்ணப்பங்களும், மே 17 அன்று 21,225 விண்ணப்பங்களும், மே 18 அன்று 17,515 விண்ணப்பங்களும், மே 19 அன்று 7,000 விண்ணப்பங்களும், மே 20 அன்று 5,075 விண்ணப்பங்களும், மே 21 அன்று 2,689 விண்ணப்பங்களும், மே 23 அன்று 5,117 விண்ணப்பங்களும், மே 24 அன்று 2,945 விண்ணப்பங்களும், மே 25 அன்று 2,184 விண்ணப்பங்களும் விற்பனை ஆகியுள்ளன. மே 26 (நேற்று) அன்று 3,478 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. ஆக மொத்தம் இதுவரை 1,56,002 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தின் விலை 500 ரூபாய். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு ரூ.250 மட்டுமே.
|