நகரின் பல பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்கப்படுவதற்கு அவ்விடங்களைப் பார்வையிட்டு முன்னுரிமை அடிப்படையில் ஒப்புதல் வழங்க, நேற்று (25.05.2011) நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் 25.05.2011 அன்று மாலை 04.30 மணிக்கு நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. நகரின் பல பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட வேண்டுமென நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவ்விடங்களைப் பார்வையிட்டு முன்னுரிமை அடிப்படையில் ஒப்புதல் வழங்க அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய சாலைகளுக்கான கோரிக்கைகள் தவிர்த்து, நகர்மன்ற நிர்வாகம் தொடர்பான பல வசதிகள் நிறைவேற்றப்படவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, அன்று மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், நகர்மன்ற காசோலை மோசடி விவகாரம் குறித்த விபரம் பதிவு செய்யப்பட்டது.
அத்துடன், நகர்மன்ற உறுப்பினர் மற்றும் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கஸ்ஸாலி மரைக்கார், அப்பொறுப்புகளிலிருந்து பதவி விலகுவதாக கடந்த 22.02.2011 அன்று எழுத்துப்பூர்வமாக நகர்மன்றத் தலைவருக்கு அளித்த கடிதம் அக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. |