தமிழக சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் - சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் முன்னிலையில்
- மனு தாக்கல் செய்தார்.
துணை சபாநாயகர் பதவிக்கு ராசிபுரம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ப.தனபால் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுக்களை முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்துள்ளார்.
ஜெயகுமார் சபாநாயகருக்கும், தனபால் துணை சபாநாயகருக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த 2 மனுக்களையும் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்துள்ளார். நிதி அமைச்சர் வழிமொழிந்திருக்கிறார்.
இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் நாளை (மே 27) சட்டமன்றம் கூடியதும், டி.ஜெயக்குமார் சபாநாயகராகவும், தனபால் துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான முறையான அறிவிப்பை நாளை காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் கூடியதும் தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் அறிவிப்பார்.
இதை அடுத்து அவை முன்னவர் ஓ. பன்னீர்செல்வமும், பிரதான எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகரை அழைத்து வந்து அவரது இருக்கையில் அமர செய்வர். பின்னர் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்தி முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பேசுவார்கள். இறுதியில் சபாநாயகர் ஏற்புரை வழங்குவார். இத்துடன் நாளை அவை நடவடிக்கைகள் முடிவு பெறும். ஜுன் மாதம் 3ஆம் தேதி சட்டமன்றத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவார்.
தகவல்:
www.chennaionline.com
|