இன்று வெளியிடப்பட்டுள்ள மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகளின்படி, காயல்பட்டினத்தைச் சார்ந்த இரண்டு மாணவியர் அரபி மொழி பாடத்தில் மாநில அளவில் இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் இரண்டாமிடம்:
காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சார்ந்த செய்யித் முஹம்மத் அலீ - ஜெய்னப் நாச்சி தம்பதியின் மகளும், காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியுமான எஸ்.எம்.ஏ.ஆயிஷா முஸ்ஃபிரா, இவ்வாண்டு மெட்ரிகுலேஷன் தேர்வெழுதி, அரபி மொழி பாடத்தில் 100க்கு 095 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்கள் 449.
மேல்நிலைப் படிப்பில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பயின்று, கணினித் துறையில் வல்லுனராக விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இவரது சகோதர்ர் முஹம்மத் ஸாலிஹ், எம்.இ. பொறியியல் கல்வி பயின்று முடித்துள்ளார்.
மாநிலத்தில் மூன்றாமிடம்:
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த, ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் அவர்களின் பேத்தியும், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் - ஹஸீனா பேகம் தம்பதியின் மகளும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவியுமான எம்.எம்.செய்யித் ஹலீமா, மெட்ரிகுலேஷன் தேர்வில் 100க்கு 095 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண்கள் 415.
மேல்நிலைப் படிப்பில் உயிரியல் பாடத்தை உள்ளடக்கிய அறிவியல் துறையில் பயின்று, மருத்துவராக விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகளின்படி, அரபி மொழி பாடத்தில் மாநில அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்றுள்ள மாணவியர் அனைவரும் 100க்கு 095 மதிப்பெண்களே பெற்றுள்ளனர். எனினும், அவர்களின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பிரித்தறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியரின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதற்கிணங்க படங்கள் அகற்றப்பட்டுள்ளன. |