இவ்வாண்டு நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு - ப்ளஸ் 2, 10ஆம் வகுப்பு - எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வுகளில், காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியர் அனைவரையும் 100 சதவிகித தேர்ச்சி பெறச் செய்தமைக்காக, அப்பள்ளியின் தலைமையாசிரியை உள்ளிட்ட ஆசிரியர் குழுவினருக்கு பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதர் ஸாஹிப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடப்பாண்டு பன்னிரண்டாம் வகுப்பு - ப்ளஸ் 2, 10ஆம் வகுப்பு - எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வுகளில், எம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியர் அனைவரையும் 100 சதவிகித தேர்ச்சி பெறச் செய்தமைக்காகவும், மாவட்ட - நகரளவில் மாணவியரை சிறப்பிடம் பெறச் செய்தமைக்காகவும், எம் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி எம்.ஜெஸீமா அவர்களையும், அவர்களின் சீரிய தலைமையின் கீழ் சிறப்புற செயலாற்றி வரும் எமதன்பிற்கினிய ஆசிரியையரையும், பள்ளி தாளாளர் என்ற அடிப்படையில் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
A.H.M.முக்தார், பி.காம்.,
சென்னை. |