காயல்பட்டணம் தஃவா சென்டரின் சமூக நல்லிணக்க மையம் (CESH) உடைய 14ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் வெற்றியை நோக்கி என்ற தலைப்பில் - இரண்டு நாள் இஸ்லாமிய மாநாடாக நேற்று துவங்கியது.
மே 28 (சனி), மே 29 (ஞாயிறு) ஆகிய இரு தினங்களில் குட்டியாப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று காலை 10:00 மணிக்கு கலாச்சார பிரச்சனைகளும், இஸ்லாமிய தீர்வுகளும்
என்ற தலைப்பில் கருந்தரங்கம் நடைபெறுகிறது.
கருத்தரங்கினை
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது MD., D.Ch.
(துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை (IFT), சென்னை) வழிநடத்துகிறார்.
எஸ்.ஹெச். ஷமீமுல் இஸ்லாம்
(செயலாளர், IIM),
மௌலவி எம். முஜிபுர் ரஹ்மான் உமரி (இஸ்லாமிய அழைப்பாளர், தமிழ் நாடு), சாளை எஸ்.எம்.ஏ. பஷீர் ஆரிஃப் (சமூக ஆர்வலர், காயல்பட்டணம்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வுகளை இத்திஹாதுல் இஹ்வானுள் முஸ்லிமீன் (IIM) நிறுவனத்தின் பிரத்தியேக இணையதளமான iimkayal.org நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. நேரடி ஒளிபரப்பினை காண இங்கு அழுத்தவும்.
தகவல்:
எஸ்.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு.
Administrator: செய்தி திருத்தப்பட்டது |