அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சரின் பொன்மொழிகள் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது.
1996இல் திமுக ஆட்சி அமைந்தபோது தமிழகத்தின் தென் பகுதிகளில் ஜாதிக்கலவரம் தீவிரமாக இருந்தது. இதனால் தென் மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் பலர் குறிப்பிட்ட சில ஜாதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வடமாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மேலும் மாவட்டம் மற்றும் அரசு பஸ் போக்குவரத்துக் கழகத்திலும் தலைவர்களின் பெயர் நீக்கப்பட்டு மாவட்டத் தலைநகர் பெயரிலேயே மாவட்டங்களும், அரசு போக்குவரத்து என பஸ்களும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறியதாவது, நீ என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் என்ற வாசகங்கள் அரசு பஸ் முழுவதும் எழுதப்பட்டது.
2001ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ஒரே நாளில் அனைத்து வசனங்களும் அழிக்கப்பட்டது. மீண்டும் 2006இல் திமுக ஆட்சி வந்ததும் அழிக்கப்பட்ட முதலமைச்சரின் வசனங்கள் முதல்வரின் பொன்மொழி என ஸ்டிக்கரில் எழுதி அனைத்து பஸ்களிலும் ஒட்டப்பட்டது. மீண்டும் ஆட்சி மாற்றமும் அதனால் காட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அரசு பஸ்களில் உள்ள முன்னாள் முதல்வரின் அனைத்து பொன்மொழிகளும் அதிரடியாக கிழித்து அகற்றப்பட்டுள்ளது. இதுவும் ஒருமேல் சபை தீர்மானம் போல மாறி மாறி நடக்கிறது என பஸ் பயணிகள் வேடிக்கையுடன் பேசிக்கொண்டனர்.
6. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல..... posted bys.s.md meera sahib (riyadh)[30 May 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4872
நாட்டிற்கு செய்ய நல்லவைகள் இருக்க..... இந்தமாதிரியான விசயத்தில் அதிரடி காட்டுவது என்பது தலைமைக்கு உகந்தது அல்ல. பொன் மொழிகள் யார் சொன்னது என்பதை பார்பதை விட என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை பார்ப்பதே நன்று.
Moderator:Dear S.S.Md Meera Sahib, pls provide your own email ID to approve your comments in future.
7. பொன்மொழிகள் posted bySEYED ALI (ABUDHABI)[30 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4873
மக்கள் வரிப்பணம் பாழாவது இப்போ மட்டும்தான் தெரிகிறதா 1967இல் அல்லவோ தெரிந்திருக்கவேண்டும்.
ஒழுக்கமான அரசியல் எங்களுக்கு வேண்டாம் கழிசடை அரசியல்தான் வேண்டும் என்று அன்று எத்தனை வேகமாக கக்கன் பூவராகவன் மஜீத் போன்றவர்களையெல்லாம் போக்கிவிட்டு திராவிடத்தை ஆடைக்குள் பார்த்தால் தெரியும் என்று ஆபாசங்களை கலை என்றும் மேதாவிலாசம் என்றும் போற்றி அரியாசனத்தில் ஏற்றினோம் இன்றும் என்றும் அதற்க்கு விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
ஆனால் விலை மிக அதிகம் இருக்கும் மொத்த தமிழகமே விலை போனாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை
8. விட்டு கொடுத்தல் நல்லது posted bysulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA)[30 May 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4876
ஒரு மாற்றம் வேண்டும் என்று தான் ஜெயாவை மக்கள் தேர்ந்து எடுத்தார்கள். ஜெயா, தான் மட்டும் இன்னும் மாறவில்லை என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதால்தான் இதை எல்லாம் செய்கிரரோ?
9. சுயநலவாதி! posted byKAVIMAGAN (DUBAI)[30 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4877
உலக அரசியலின் ஒப்பற்ற சுயநலவாதி, சூதும், வாதும் நிறைந்த கெடுமதியாளன்,
தமிழர்களின் அவமானச்சின்னம், ஒரு குடும்பத்திற்காகவே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற வஞ்சகத்தின் முழு உருவம்,
தமிழக மக்களால் வெறுத்து, ஒதுக்கப்பட்ட ஒருவரின் புலம்பல்களை பொன்மொழி என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பது, வருங்கால தலைமுறைக்கு தெரியாமல் இருப்பதே, தமிழுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.
10. சுதந்திர தாகம் posted bySyed (DxB)[30 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4878
ஏதோ வெளி நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் நடந்த சம்பவங்களை (கூத்துகளை)ப் பற்றி செய்தியில் படித்து அதற்கு கருத்துரையும் எழுதுவது போலல்லவா இருக்கிறது, நாம் படிக்கும் இந்த செய்திகளும் COMMENTSம்.
நம் சொந்த மண்ணில் நம்மால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் தான் இது போன்று பொறுப்பற்ற முறையில் தமது EGO காரணமாக மக்கள் பணத்தை வெட்டித்தனமாக வீண் விரையம் செய்கிறார்கள் என்ற உண்மை நிலையை என்னும் போது நிச்சயமாக வேதனையும், (இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுத்ததற்காக) வெட்கமும் பட வேண்டியுள்ளது.
துரோகியை விட விரோதி பரவாயில்லை என்று தேர்தல் நேரங்களில் ஆட்சி மாற்றத்திற்கு நம் மக்கள் சொன்ன சப்பைக்கெட்டு நினைவில் வருகிறது.
எத்தனை காலத்திற்குத்தான் நாம் மற்றவர்களை/எதிரிகளை மாற்றி மாற்றி அரியணை அமரவைத்துப் பார்ப்பதாக உத்தேசம்?
நமக்கென்று ஒரு கட்சி ஒரே கட்சி, ஒரே சின்னம், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் (பாகுப்பாடின்றி) உழைக்கும் உயர்ந்த நோக்கத்தில் சுதந்திரமாக இயங்கும் "சுய கவுரவம்" கொண்ட அமைப்பு உருவாகும் காலம் என்றுதான் வருமோ?
இறைவன் எல்லாவற்றுக்கும் போதுமானவன். وبه نستعيــن
Moderator:Dear Syed, pls provide your full name to avoid rejecting your comments in future.
11. பொன்மொழிகள் யார் posted byvsm ali (Kangxi , Jiangmen , China)[31 May 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 4886
பொன்மொழிகள் யார் சொன்னார் என்பதைவிட என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்பதே மேல். இது அ தி மு க கட்சிக்காரர்களுக்கே தெரியும். EGO பிரச்சினைதான் காரணம். தலைமையின் கட்டளையால் "ஆமாம்" போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
"சமச்சீர் கல்வி" தடை செய்யப்பட்டதும் EGO பிரச்சினைதான். இப்போதுள்ள கல்வியால், பத்தாம் வகுப்பு வரை CBSE, Metricஇல் படித்தவர்கள், அடுத்த இரண்டு வருடம் state board syllabusஇல் படித்து அதிக பதிப்பெண் பெற்று, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சுலபமாக சேர்ந்து விடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது, ஆரம்பம் முதலே state board syllabusஇல் படிக்கும் மாணவர்கள்.
12. ஒரு அமைச்சராவது உண்டா? posted byLebbai (Riyadh)[31 May 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4892
இந்த ஆட்சியில் நம் சமுதாயத்துக்கு ஒரு அமைச்சராவது உண்டா ? மரியம் பிச்சை அவர்கள் மரணத்துக்கு பின் நம் சமுதாயத்துக்கு ஒரு பிரதிநித்துவம் கிடைக்கவில்லையே? பொறுத்திருந்து பார்ப்போம்.
13. ஓரளவு நன்மை posted byLebbai (Riyadh)[31 May 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4896
இங்கே மேலும் ஒன்றை சுட்டிக்காட்ட விழைகிறேன். கடந்த ஆட்சியில் இடஒதுக்கீட்டால் நம் சமுதாயம் ஓரளவு நன்மை பெற்றது என்பது தெளிவு. நான் அறிய நம் சகோதர சகோதரிகள் மருத்துவ துறைக்கே இடஒதுக்கீட்டால் இலகுவாக இடம் கிடைத்தது நினைவிருக்கிறது. அதுபோல் இந்த ஆட்சியில் சமுதாயம் பயன் பெற்றால் நல்லதுதான்.
14. கீழே..... ஓடுற நரியில ஒரு நரி குள்ளநரி..!!! posted byzubair (riyadh)[31 May 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4897
எந்த ஒரு தமிழ் கவிஞனும் கருணாநிதியை கவி விசயத்தில் குறை கூற மாட்டார். ஏன்......... ஜெ விடம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு கருணாநிதியிடம் பிடித்தது என்ன? என்று வினவிய பொது அவரின் கவிதை, கட்டுரை என்றார்.
இப்படி இருக்க நம் கவிமகன்....... எழுதி இருப்பது வருத்தத்தை தருகிறது.
15. நீதியில் 60% மே தேர்ச்சி..... posted byzubair (riyadh)[31 May 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4903
அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் என்னுடையதை பிரசுரித்ததில் சந்தோசம். ஆனால் முழு திருப்தி இல்லை. என்னுடையதை பிரசுரித்ததைவிட கவிமகனின் குறிப்புகளை நீக்கி இருக்கலாம். தமாசாக எழுதுவது வேறு, இவர் புழுதி வாரி தெளித்து இருப்பது வேறு. என்னுடையதை எடிட் பண்ணும் நீங்கள் எப்படி அதை அனுமதித்தீர்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நான் கடைசியில் சேர்த்த வாசகம்..... இவர் பதிப்பில் வேதனை படுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்பதால் மட்டுமே. "பட்டால் தானே புத்திவரும்" என்று நீங்கள் விட்டு இருக்கலாம். இனி உங்கள் விருப்பம்.
16. அன்பு சகோதரர் ஜுபைர்! posted bykavimagan m.s.abdul kader (dubai)[31 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4907
அன்பு நண்பர் ஜுபைர் அவர்களுக்கு!
எனது கருத்துக்கள் தங்களது மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் எனது கருத்துக்கு பதிலுரைக்கும் வேகத்தில், தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கி குள்ளநரி என்று தலைப்பு தந்தபோது உள்ளபடியே ரசித்தேன். சிரித்தேன்.
பல்வேறு ஊடகங்களில் எழுதிவரும் நான், என்றைக்கும் புழுதி
வாரித் தூற்றியது இல்லை. நீங்கள் அனுமதி அளித்தால், எனது
கருத்துக்கள் அனைத்துமே சரியானது என்பதை நிரூபிக்கும் பல
நூறு ஆதாரங்களை தங்களது மின்னஞ்சலுக்கு நான் அனுப்பித்தர
தயாராக இருக்கிறேன்.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். அதே நேரத்தில் நான்
உங்கள் சகோதரன், உங்களுள் ஒருவன் என்பதை மறந்து விடாதீர்கள்!
17. யாருக்கு இலாபம்? posted bymuhammed umar , Muhammed Irshath (Jeddah, Saudi Arabia)[01 June 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4912
இப்படி மாற்றுவதால் யாருக்கு என்ன லாபம்?
அட போங்கப்பா!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross