தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னால் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தமிழக சட்டசபை உறுப்பினர்களாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். மே 23 அன்று நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 231 உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். இது குறித்த தமிழக அரசு செய்தி குறிப்பு தெரிவிப்பதாவது :-
திருவாரூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.மு.கருணாநிதி அவர்களும், காட்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.துரைமுருகன் அவர்களும் நேற்று (30-5-2011) முறையே காலை 11.01 மணிக்கும், 11.03 மணிக்கும், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அறையில் இந்திய அரசமைப்பில் உள்ளவாறு சட்டமன்ற பேரவை உறுப்பினர்களான உறுதிமொழியினை எடுத்து கொண்டார்கள்.
தகவல்:
அ.மு.பி. ஜமாலுதீன்,
செயலாளர், தலைமை செயலகம்.
|