21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவு:
(ஆட்சியர்கள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
1. பி.உமாநாத் - நிதித் துறை இணைச் செயலாளர் (கோவை மாவட்ட ஆட்சியர்)
2. பி.சீதாராமன் - சுனாமி திட்ட இயக்குநர் (கடலூர் மாவட்ட ஆட்சியர்)
3. எம்.வள்ளலார் - தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையாளர் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்)
4. சி.காமராஜ் - போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் (ஈரோடு மாவட்ட ஆட்சியர்)
5. ராஜேந்திர ரத்னு - சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை இணைச் செயலாளர் (கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்)
6. ஜெ. உமா மகேஸ்வரி - உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
7. ஆர்.பழனிச்சாமி - நகராட்சி நிர்வாகங்களின் இணை ஆணையாளர் (விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்)
8. எம்.விஜயகுமார் - சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை துணைச் செயலாளர் (பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்)
9. ஏ.சுகந்தி - சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட துணைச் செயலாளர் (புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்)
10. டி.என்.ஹரிஹரன் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துணைச் செயலாளர் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்)
11. ஜெ.சந்திரகுமார் - வருவாய்த் துறை இணைச் செயலாளர் (சேலம் மாவட்ட ஆட்சியர்)
12. எம்.எஸ்.சண்முகம் - தொழில் துறை இணைச் செயலாளர் (தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்)
13. எம்.ஜெயராமன் - தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணைச் செயலாளர் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்)
14. டி.பி.ராஜேஷ் - தமிழ் வளர்ச்சித் துறை, அறநிலையங்கள், செய்தித் துறை துணைச் செயலாளர் (திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்)
15. சி.சமயமூர்த்தி - பொதுத் துறை இணைச் செயலாளர் (திருப்பூர் மாவட்ட ஆட்சியர்)
16. வி.கே.சண்முகம் - வேளாண்மைத் துறை இணைச் செயலாளர் (விருதுநகர் மாவட்ட ஆட்சியர்)
17. டி.கே.பொன்னுசாமி - எரிசக்தித் துறை இணைச் செயலாளர் (அரியலூர் மாவட்ட ஆட்சியர்)
18. வி.பழனிகுமார் - தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் (வேலூர் மாவட்ட ஆட்சியர்)
19. எஸ்.மதுமதி - சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) (நாமக்கல் மாவட்ட ஆட்சியர்)
20. வி.சம்பத் - தமிழ்நாடு வெடிபொருட்கள் நிறுவன மேலாண் இயக்குநர் (சிவகங்கை மாவட்ட ஆட்சியர்)
21. மகேசன் காசிராஜன் - தமிழ்நாடு நீர்ப்பாசன மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநர் (திருச்சி மாவட்ட ஆட்சியர்)
பொதுவாக ஆட்சியர் மாற்றங்களின்போது - ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றப்படுவது வழக்கம். தற்போதைய அறிவிப்பில் 21 மாவட்டங்களின் ஆட்சியர்களும், வேறு ஒரு துறை வழங்கப்பட்டுள்ளனர். வேறொரு மாவட்டத்தின் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross