தமிழக அரசு மே 30 அன்று 21 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு புது பொறுப்புகளை அறிவித்திருந்தது. அதில் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியக பொறுப்புகள் இன்றி பிற துறைகளுக்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து நேற்று வெளியான அரசு செய்தி குறிப்பு 29 மாவட்டங்களுக்கான புதிய ஆட்சியர்கள் விபரத்தினை வெளியிட்டுள்ளது.
அதன்படி யு.சகாயம் - மதுரை மாவட்ட ஆட்சியராக தொடர்கிறார். அர்ச்சனா பட்நாயக் - நீலகிரி மாவட்ட ஆட்சியராக தொடர்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயலாளர் ஆர்.செல்வராஜ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
(1) கரூர் - வி. சோபனா
(2) அரியலூர் - அனு ஜார்ஜ்
(3) திருவண்ணாமலை - அன்சுல் மிஸ்ரா
(4) நாமக்கல் - ஜே.குமரகுருபரன்
(5) பெரம்பலூர் - தரேஸ் அஹ்மத்
(6) சேலம் - கே.மகரபூசனம்
(7) விழுப்புரம் - சி.டி.மணிமேகலை
(8) திண்டுக்கல் - கே.நாகராஜன்
(9) விருதுநகர் - எம்.பாலாஜி
(10) திருவாரூர் - சி.முனியனாதன்
(11) ஈரோடு - ஆர்.அனந்த குமார்
(12) தர்மபுரி - ஆர்.லில்லி
(13) கிருஷ்ணகிரி - சி.என்.மகேஸ்வரன்
(14) கடலூர் - வி.அமுதவல்லி
(15) நாகப்பட்டினம் - டி.முனுசாமி
(16) தஞ்சாவூர் - கே.பாஸ்கரன்
(17) வேலூர் - எஸ்.நாகராஜன்
(18) புதுக்கோட்டை - பி.மகேஸ்வரி
(19) தேனி - கே.எஸ்.பழனிசாமி
(20) திருச்சி - ஜெயஸ்ரீ முரளிதரன்
(21) திருப்பூர் - எம்.மதிவண்ணன்
(22) காஞ்சிபுரம் - எஸ். சிவசண்முக ராஜா
(23) திருவள்ளூர் - ஆசிஸ் சட்டர்ஜி
(24) சிவகங்கை - வி.சாந்தா
(25) திருநெல்வேலி - எஸ்.நடராசன்
(26) கோயம்புத்தூர் - எம்.கருணாகரன்
(27) தூத்துக்குடி - ஆர்.செல்வராஜ்
(28) ராமநாதபுரம் - வி.அருண் ராய்
(29) கன்னியாக்குமரி - ஆசிஸ் குமார்
(30) மதுரை - யு.சகாயம்
(31) நீலகிரி - அர்ச்சனா பட்நாயக்
1. என்ன கொடுமையோ இது.. posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[01 June 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4917
புதிய மாவட்ட ஆட்சியாளருக்கு வாழ்த்துக்கள்.
நம் நாட்டின் உள்ள சாபக்கேட்டில் இதுவும் ஒன்று. நன்றாக ஆட்சிபுரிந்து, நல்ல திட்டங்கள் அமுல்படுத்த ஆரம்பித்து, மக்கள் மனதில் இடம் பிடிக்கும்போது உடனே தூக்கி அடித்து விடுவார்கள். என்ன கொடுமையோ இது..
வருபவரும் நல்லவராக தான் இருப்பார், அவரும் நன்கு செயல்படும்போது மாற்றப்படுவார்.
ஒரு மாவட்ட ஆட்சியாளர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஒரே இடத்தில இருந்தால்தான் அவரால் பல திட்டங்கள் முழுமை பெரும். யார் யாரிடம் எடுத்துச்சொல்வது.
2. மிக்க நன்றி சி.ந.மகேஸ்வரன் I.A.S. வரவேற்கிறோம் DR.செல்வராஜ் I.A.S. posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[01 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4918
நாம் நல்ல ஒரு மாவட்ட கலெக்டரை இழந்துள்ளோம்.நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளோதான்.சி.ந.மகேஸ்வரன் I.A.S. அவர்களே! தாங்கள் மிக சிறப்பாக பணியாற்றி எங்களின் மனதை கொள்ளை கொண்டதமைக்கு வாழ்துக்கள்.
உங்கள் நேர்மையான,மாணவ செல்வங்களை உற்சாக படுத்தும் திறன்,அணைத்து சமுதாய மற்றும் அதிகாரிகளை நேர்மையுடன் பணியாற்ற வைக்கும் திறன்,அணைத்து அறிவியல் மற்றும் தகவல் தொடர்புகளையும் அமுல்படுத்தி மக்களின் சேவையை முதல் பணி என்று பாடுபட்ட உங்களை போன்ற அதிகாரிகள் நமது நாட்டிற்கு மிக மிக அவசியம் என்பதுடன் புதிதாக வந்துள்ள DR.செல்வராஜ் I.A.S. அவர்கள் உங்களையும் மிஞ்சி மிக சிறப்பாக பணியாற்ற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
3. congratulation posted bysyedahmed (Guangzhou,China)[01 June 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 4920
congratulate to our district new collector dr.selvaraj i.a.s. hope our new collector implement our district peoples' need at his full effort in the way of success.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross