KayalSky.com இணையத்தளத்தில் ஒவ்வொரு மாதமும் காயல் வானில் பூமியை சுற்றிவரும் HUBBLE TELESCOPE மற்றும் INTERNATIONAL SPACE STATION ஆகியவற்றை பார்க்க கூடிய நேரம் மற்றும் திசை வெளியிடப்படுகிறது (இவை இரண்டும் தவிர பல செயற்கை கோள்கள் காயல்பட்டணத்தில் தென்படும்). தற்போது ஜூன் மாத நேரம், திசை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
காயல்பட்டணத்தில் HUBBLE TELESCOPE ஜூன் மாதம் 1ம் தேதி, ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், 21ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் தென்படும். INTERNATIONAL SPACE STATION (ISS) ஜூன் மாதம் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரையும் தென்படும். மேலும் நேரம் மற்றும் தெரியும் திசையினை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதற்கான விளக்கப்படம் KayalSky.com இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது.
காயல்பட்டணம் தவிர பிறவூர்களில் வசிப்போர் www.heavens-above.com என்ற இணையதளத்தில் அவர்கள் ஊர்களில் இச்செயற்கை கோள்கள் தென்படும் நேரங்களை அறிந்துகொள்ளலாம்.
தகவல்:
www.kayalsky.com
|