தமிழகத்தில் புதிததாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, துவக்கமாக வெளியிட்ட அரசு உத்தரவுகளில் ஓரம்சமாக, மாநிலத்தின் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் 01.06.2011 (நேற்று) காலையில் தமிழகத்தின் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இலவச அரிசி வினியோகம் நடைபெற்றது.
தூத்துக்குடி நகரில் நடைபெற்ற இலவச அரிசி வினியோகத்தை மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் பார்வையிட்டார்.
காயல்பட்டினத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நேற்று காலை 08.00 மணிக்கு இலவச அரிசி வினியோகம் துவங்கியது. அ.தி.மு.க. நகரச் செயலாளர் காசிம் வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
நகர பொருளாளர் ஜின்னா, துணைச் செயலாளர் சேக் அப்துல் காதிர், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் எஸ்.ஏ.சாக்லா, ஜெயலலிதா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், மாவட்ட பிரதிநிதி மனோகரன், ஹாஜி சின்னத்தம்பி, என்.எம்.அஹ்மத், ஓடை சேகர், ஒன்றியச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், சி.பி.முத்தையா, எம்.எல்.இல்யாஸ், பி.டி.கபீர், எம்.இ.எல்.புகாரீ, எம்.எஸ்.டில்லி ஹமீத், மேலவை பிரதிநிதி அபூபக்கர், நூருல் அமீன், ஏ.ஆர்.முகைதீன், அப்பாஸ், ஜாஹிர் ஹுஸைன், ஆறாவது வார்டு அபூபக்கர், நிஜார், எம்.எஸ்.ஷம்சுத்தீன், ஹஸன், மொகுதூம் மீராஸாஹிப், தே.மு.தி.க. நகரச் செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், நகர துணைச் செயலாளர் எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். |