குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது குழந்தையை எந்த ஒரு பரிசீலனை நடவடிக்கைக்கும் உட்படுத்தக் கூடாது. மீறி உட்படுத்தினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வயது சான்று இல்லை என்ற காரணத்திற்காக குழந்தைகளை பள்ளியில் சேர்க்கை அனுமதி வழங்காமல் இருக்கக் கூடாது என்று மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
6 முதல் 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கென மத்திய அரசு தனி சட்டமே இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொன்றாக மத்திய அரசு கல்வித்துறைக்கு தெரிவித்து வருகிறது. இது சம்பந்தமாக வெளியாகியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தொடக்க கல்வியை முடிப்பதற்கு வழியில்லாத ஒரு பள்ளியில் பயிலும் ஒரு குழந்தைக்கு தனது தொடக்க கல்வியை முடிப்பதற்காக வேறு பள்ளிக்கு மாற்ற கோரும் உரிமை உண்டு. தொடக்க கல்வியை முடிப்பதற்காக ஒரு மாநிலத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாற வேண்டிய அவசியம் உள்ள ஒரு குழந்தைக்கு எந்த ஒரு பள்ளிக்கும் தன்னை மாற்றுமாறு கோர உரிமை உண்டு.
அப்படிப்பட்ட நிலையில் வேறொரு பள்ளியில் சேர்த்து கொள்ள கோருவதற்காக கடைசியாக அந்த குழந்தை படித்த பள்ளியின் தலைமையாசிரியர் அல்லது பொறுப்பாளர் உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கு தாமதமாகும் நிலையில் அது அந்த குழந்தையை வேறொரு பள்ளியில் சேர்ப்பதற்கு தாமதப்படுத்துவதற்கான அல்லது மறுப்பதற்கான காரணம் ஆகாது. மாற்றுச்சான்றிதழ் வழங்குவதற்கு தாமதப்படுத்தும் பள்ளியின் தலைமையாசிரியர் அல்ல பொறுப்பாளர் பொருத்தமான பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.
எந்த பள்ளியும் ஒரு குழந்தையை சேர்க்கும் போது அதன் பெற்றோர் பாதுகாப்பாளரிடம் இருந்து எந்த ஒரு கல்விக்கட்டணமும் வசூலிக்க கூடாது. குழந்தையை எந்தவொரு பரிசீலனை நடைமுறைக்கும் உட்படுத்தக் கூடாது. கல்விக்கட்டணம் வசூல் செய்தால் கல்விக் கட்டணத்தை போல் பத்து மடங்கு வரை அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.
குழந்தையை பரிசீலனை நடைமுறைக்கு உட்படுத்தினால் முதல் தடவையாக விதியை மீறும் போது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் தண்டனையாக விதிக்கப்படும். தொடக்க கல்விக்கு குழந்தையை சேர்ப்பதற்கு அந்த குழந்தையின் வயது 1886ஆம் ஆண்டின் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சட்டத்தின் கீழ் வழங்கப்படும். பிறப்பு சான்றிதழின் அடிப்படையில் அல்லது அதுபோன்ற இதர ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும்.
வயது சான்றிதழ் இல்லாத காரணத்திற்காக எந்தவொரு குழந்தையையும் பள்ளியில் சேர்க்கை அனுமதி மறுக்கக் கூடாது. நீடிக்கப்பட்ட காலத்தை ஒட்டி பள்ளியில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கப்படுமானால் எந்த ஒரு குழந்தைக்கும் சேர்க்கை அனுமதி மறுக்க கூடாது. நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு பின் சேர்க்கப்படும் எந்த ஒரு குழந்தையும், உரிய அரசாங்கத்தால் வகுத்துரைக்கப்படும் முறையில் கல்வியை முடிக்கலாம்.
ஒரு பள்ளியில் சேர்க்கப்படும் எந்த ஒரு குழந்தையும் தொடக்க கல்வி முடியும் வரையில் எந்த ஒரு வகுப்பிலும் தொடர்ந்து நிறுத்தி வைத்தல் கூடாது. பள்ளியில் இருந்து வெளியேற்றப்படவும் கூடாது. எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியான தண்டனைக்கோ மன ரீதியான துன்புறுத்தலுக்கோ உள்ளாக்கப்படக் கூடாது.
இந்த விதிகளை மீறி செயல்படுவோர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். அங்கீகாரச்சான்று பெறாமல் ஒரு பள்ளியை நிறுவுகிற அல்லது நடத்துகிற எந்த ஒரு நபரும் அல்லது அங்கீகாரம் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு தொடர்ந்து பள்ளியை நடத்துகிற எந்த ஒரு நபரும் ஒரு லட்ச ரூபாய் வரையில் தண்டனை தொகைக்கு உட்படுத்தப்படுவர்.
இந்த விதி மீறல் தொடரும் நிலையில், விதிமீறல் தொடரும் வரையில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். அங்கீகாரம் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு பள்ளியை தொடர்ந்து நடத்துகிற எந்த ஒரு நபரும் ஒரு லட்ச ரூபாய் வரையில் தண்டனை தொகைக்கு உட்படுத்தப்படுவர்.
2. புண்ணாக்குங்க.. posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[04 June 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5008
அப்படிப் போடு அருவாளை!
சட்டம் எல்லாம் நன்றாகதான் போடுகிறார்கள், இதுவரை யாரையாவது தண்டித்து உள்ளதாக ஒரு சரித்திரத்தை காட்டுங்கள்.
என் சகோதரி தன் மகன்களை UKG இல், சென்னையில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தில் சேர்க்க பட்ட கஷ்டத்தை என்னிடம் சொன்னபோது, இப்படியுமா நடக்கிறது என்று நமக்கே கண்ணீர் வருகிறது.
குழந்தைக்கு இன்டெர்வியு, பெற்றோர்களுக்கு இரண்டு கட்ட இன்டெர்வியு, சொந்த கார் உள்ளதா, சொந்த வீடு உள்ளதா(கூடுதலாக வீட்டையும் பார்க்க வந்தார்களாம்), பெற்றோர்களின் கல்வி தகுதி, அதற்கும் மேலாக நன்கொடை... கடைசியாக பெற்றோர்களை அழவைத்துதான் அனுப்புகிறார்கள்... புண்ணாக்குங்க..
ஒரு பள்ளிக்கூடத்தை தண்டியுங்கள் பார்க்கலாம்..
கெட்ட கெட்ட வார்த்தையா வருது.. நல்ல வார்த்தை எழுதினாலே நம்முடைய கமெண்ட்ஸ் NOT APPROVAL என்று சென்று விடுகிறது.. (புண்ணாக்கு நல்ல வார்த்தையா இல்லை கெட்ட வார்த்தையா தெரியவில்லை.. மாடுகளே மன்னித்துக் கொள்ளுங்கள்.. இது உங்களின் உணவு என்று மட்டும் தெரிகிறது)
3. ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது...........! posted bys.s.md meera sahib (riyadh)[05 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5020
இப்பொழுது மத்தியில் காங்கரஸ் ஆட்சிதான் நடக்குதா?...... செய்தியை படித்து வரும்போதே இந்த சந்தேகம் வந்துவிட்டது. சட்டம்லாம் சூப்பராதான் இருக்குது. ஆனா....... வேலைக்கு ஆவாது. இதை மாதிரியான சட்டம்லாம் அமுல்படுத்த காங்கரஸ் கட்சிக்கு இந்திரா காந்திதான் திருப்பி எழுதிரிச்சி வரணும்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross