தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளை சார்பில் ஆண்டுதோறும் நகரிலுள்ள ஏழை மாணவ-மாணவியருக்கு பள்ளிப் பாடக்குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு இலவச வினியோகம் 03.06.2011 அன்று (நேற்று) இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் கூலக்கடை பஜாரிலுள்ள ஏ.பி.டி. பஜாஜ் ஏஜென்ஸி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணி மாநில செயலாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, மாணவ-மாணவியருக்கு பாடக் குறிப்பேடுகள் இலவச வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
காயல்பட்டினம் நகரைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள 100 மாணவ-மாணவியருக்கு பாடக் குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் அன்னை கதீஜா மத்ரஸா நிறுவனர் மாஷாஅல்லாஹ் செய்யித் முஹம்மத், தமுமுக நிர்வாகிகளான வாவு புகாரீ, ஜாஹிர் ஹுஸைன், தமீமுல் அன்ஸாரீ, முஸ்தஃபா, எஸ்.டி.இப்றாஹீம், ஃபிர்தவ்ஸ், சாமு, அப்துல் காதிர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
|