இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் - மாநில அளவில் - 2ஆம் மற்றும் 3ஆம் இடம் பெற்ற ஐந்து மாணவ, மாணவியரின் சிறப்பு பேட்டிகள் www.toppersTalk.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அது குறித்த விபரம் வருமாறு:-
1187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றவர் எஸ்.வேல்முருகன். கள்ளக்குறிச்சியில் உள்ள பாரதி மெட்ரிக்குலேசன்
மேல்நிலை பள்ளி மாணவரான இவர் எம்.பி.பி.எஸ். படிக்க முடிவெடுத்துள்ளார். அவரின் பேட்டியினை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.
1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றவர் டி.வித்யா சகுந்தலா. திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் சில்வர் ஜுபிலி பள்ளி மாணவியரான இவர் எம்.பி.பி.எஸ். படிக்க முடிவெடுத்துள்ளார். அவரின் பேட்டியினை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.
1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றவர் என்.ரகுநாத். பெரியகுளத்தில்
உள்ள டி.எம்.ஹெச்.என்.யு. பள்ளி காமர்ஸ் பிரிவு மாணவரான இவர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளியல் (B.A. Economics)
படிக்க முடிவெடுத்துள்ளார். அவரின் பேட்டியினை முழுமையாக காண இங்கு
அழுத்தவும்.
1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றவர் பி.சிந்துகவி. நாமக்கல் குறிஞ்சி
மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி மாணவியரான இவர் எம்.பி.பி.எஸ். படிக்க முடிவெடுத்துள்ளார். அவரின் பேட்டியினை முழுமையாக காண
இங்கு அழுத்தவும்.
1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றவர் பி.எஸ். ரேகா. ஓசூர் நகரில்
உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவியரான அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ (ECE) படிக்க முடிவெடுத்துள்ளார். அவரின்
பேட்டியினை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.
www.toppersTalk.com - காயல்பட்டணம்.காம் இணையதளத்தை நடத்தும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் உடைய இணையதளம் ஆகும். 2006 முதல் மாநில அளவில் - பன்னிரண்டாம்
வகுப்பு அரசு பொது தேர்வில் - முதல் 3 இடம் பிடிக்கும் மாணவ, மாணவியரின் சிறப்பு பேட்டிகளை இவ்விணையதளம் வெளியிட்டுவருகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross