உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் 28.05.2011 அன்று காலையில் காயல்பட்டினம் ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் சிற்றரங்கில் நடைபெற்றது.
இக்ராஃ நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவில் உள்ள வெற்றிடங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் அக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டனர்.
புதிய பொறுப்பாளர்கள் நியமனத்திற்குப் பின் இக்ராஃவின் நிர்வாகக் குழு விபரம் பின்வருமாறு:-
இக்ரா வின் புதிய தலைவர் & அணைத்து நிர்வாக குழுவினர்க்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்களின் நல்ல சேவைகள் நம் காயல் மக்களளுக்கு குறைவின்றி தொடர வாழ்த்துக்கள்.
3. நூறாண்டு காலம் வாழ்க! posted bykavimagan m.s.abdul kader (dubai)[02 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4956
இளமையும், அனுபவமும் கைகோர்த்திருக்கிறது. தன்னலமற்ற
சமூக சிந்தனை நல்லவர்களை ஒரே அணியில் இணைத்திருக்கின்றது. நிர்வாகக் குழுவினர்க்காகவும், அவர்தம்
குடும்பத்தினருக்காகவும், ஏகன் இறையிடம் இருகரமேந்தி துஆ
செய்வோமாக! சமூகஆர்வலர் ஹாஜி ஹசன் சார் அவர்களது
சேவையும், நல்லபல திட்டங்களும், வழிகாட்டுதலும் தளராது
தொடர வாழ்த்துவோமாக!
தர்வேஸ் காக்கா, எஸ்.கே.எஸ். மச்சான், தோழர். கே,ஜே.சாஹுல் ஹமீத் ( 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த போட்டோ என்று எண்ணுகிறேன்) சுலைமான் காக்கா, சுலைமான் சார், ஆகிய சிறந்த களப்பணியாளர்களைத் தாங்கிய இக்ரா, டாக்டர் அவர்களின் சீரிய தலைமையில், இறையருளால், சப்தமான
வெற்றியைப் பெற மீண்டும் வாழ்த்துவோமாக!
துணைத்தலைவர்கள், செயற்குழு, பொதுக்குழு மற்றும் இக்ராவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், ஆதரவாளருக்கும்,
அனுதாபிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இக்ரா உடைய புதிய தலைவருக்கும் மற்ற நிர்வாக உருப்பினர் களுக்கும் எங்களுடைய (சிங்கை) மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களுடைய நற்பணிகள் தொடர வல்ல அல்லாஹ் துணை புரிவானாக,ஆமீன்.
5. இக்ராஃவின் புதிய நிர்வாகக் குழுக்கு வாழ்த்துக்கள்!! posted bySalai.Mohamed Mohideen (USA)[03 June 2011] IP: 72.*.*.* United States | Comment Reference Number: 4978
இக்ராவின் புதிய தலைவர் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
முன்னாள் தலைவர் பாளையம் ஹசன் அவர்கள் நமது இக்ராவை தனது வழிகாட்டுதல் மூலம் மிக சிறப்பாக பணியாற்றி இக்ராவின் செயல்பாடுகளில் ஒரு நல்ல மாற்றத்தையும் ஒரு உத்வேகத்தையும் ஏட்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.
அது போல் சுழற்சி முறையில் வரும் ஒவ்வொரு தலைவரும் கடமைக்காக பதவியை வகித்து விடாமல், கடந்த காலத்தை விட நடப்பாண்டில் இக்ராவின் செயல்பாடுகளில் காலத்திற்கு தகுந்த புதுமைகளை புகுத்தி இக்ராவின் செயல்பாடுகளை மெருகூட்டினால் மிகவும் நன்றாக இருக்கும்.
எல்லோரும் செவ்வென பணியாற்றுவதொடு மட்டுமில்லாமல் நமது இக்ரா ஒவ்வொருவருடைய தலைமையிலும் ஏதாவது ஒரு பயனுள்ள மாற்றத்தை கண்டு என்றும் சிறப்புடன் செயல்பட மனமார வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross