தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கணிதத்தில் 510, அறிவியலில் 137 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர். 347 மாணவ, மாணவிகள் ஒரு பாடத்தில் தேர்ச்சியிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அதிகமான மாணவ, மாணவிகள் மிக அதிக மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த அளவிற்கு மாணவ, மாணவிகள் மார்க் பெறுவார்கள் என்று ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிளும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த முறை பெரும்பாலான மாணவ, மாணவிகள் அதிக மார்க் பெற்றுள்ளனர்.
பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்:
இதற்கிடையில் தற்போது வெளியாகிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 87.01 சதவீத தேர்ச்சியும், ஒரே மாநகராட்சி பள்ளியான சாமுவேல்புரம் பள்ளியில் 85.71 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 96.60 சதவீத தேர்ச்சியும், சுயநிதி தனியார் பள்ளிகளில் 98.12 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சி 95.27 சதவீதமாகும். கடந்த ஆண்டை விட இவை அதிகமாகும்.
தேர்ச்சியின்மை விபரம்:
இக் கல்வி மாவட்டத்தில் ஒரு பாடத்தில் 347 மாணவ, மாணவிகளும், இரண்டு பாடத்தில் 148 மாணவ, மாணவிகளும், மூன்று பாடத்தில் 80 மாணவ, மாணவிகளும், நான்கு பாடத்தில் 39 மாணவ, மாணவிகளும், 5 பாடத்தில் 29 மாணவ, மாணவிகளும் பெயில் ஆகியுள்ளனர்.
ஜாதி அடிப்படையில் அசத்திய முதல் பதின்மர் (டாப் 10):
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட (பி.சி, எம்.பி.சி, எஸ்.சி) மாணவ, மாணவிகள் உயர்மதிப்பெண்கள் எடுத்தோர் பட்டியலும் சேகரிக்கப்பட்டு அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை சார்பில் விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
பி.சி பிரிவில் மாணவர்களில் அதிகப்பட்ச (மேக்சிமம்) மார்க்காக 490 மார்க்கும், குறைந்தப்பட்ச மார்க்காக (மினிமம்) 486 மார்க்கும் வைக்கப்பட்டு 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேரும், தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவரும், நாசரேத் மர்காசியஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் 2 பேரும், காயல்பட்டணம் எல்.கே பள்ளி மாணவர் ஒருவரும் பெற்றுள்ளனர்.
பி.சி பிரிவு மாணவிகளில் மேக்சிமம் மார்க் 495யும், மினிமம் மார்க் 488யும் வைக்கப்பட்டு 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஸ்பிக்நகர் பள்ளி மாணவிகள் 3 பேரும், தூத்துக்குடி ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 3 பேரும் தூத்துக்குடி சுப்பையாவித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 பேரும், தூத்துக்குடி அலாசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவரும், ஆறுமுகனேரி கே.ஏ மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவரும் பெற்றுள்ளனர்.
எம்.பி.சி பிரிவு மாணவர்களில் மேக்சிமம் மார்க் 491யும், மினிமம் மார்க் 479யும் வைக்கப்பட்டு 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஸ்பிக்நகர் பள்ளி 4 மாணவர்களும், தூத்துக்குடி சென்சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம் சென்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி தலா 2 மாணவர்களும் வாழவல்லான் அரசு பள்ளி, மூக்குப்பீறி சென்பால்ஸ் பள்ளி, மணப்பாடு சென்ஜோசப் பள்ளி, பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளி, துக்துக்குடி இன்னாசியார் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாணவரும் பெற்றுள்ளனர்.
எம்.பி.சி பிரிவு மாணவிகளில் மேக்சியம் 492 மார்க்கும், மினிமம் மார்க் 483ம் வைக்கப்பட்டு 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஸ்பிக்நகர் பள்ளி 4 மாணவிகளும், தூத்துக்குடி சின்னமணிநாடார் பள்ளி 3 மாணவிகள், அலாசியஸ் பள்ளி, சாத்தான்குளம் சென்ஜோசப்பள்ளி, சாயர்புரம் போப் மெமோரியல் பள்ளி, புன்னக்காயல் புனித வளன் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாணவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களில் மேக்சிமம் 485 மார்க்கும், மினிமம் 474 மார்க்கும் வைக்கப்பட்டு 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஸ்பிக் மற்றும் காரப்பேட்டை பள்ளிகளில் தலா 2 மாணவரும், தூத்துக்குடி இன்னாசியார்புரம், தூத்துக்குடி சென்சேவியர்ஸ், குரும்பூர் சென் லூசியா, பழையகாயல் சென் ஆன்டனி, தூத்துக்குடி லசால், கீழபூவாணி அரசு உயர்நிலை ஆகியவற்றில் தலா ஒரு மாணவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாணவிகளில் மேக்சியம் 491 மார்க்கும், மினிமம் 477 மார்க்கும் வைக்கப்பட்டு 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் 4 பேரும், தூத்துக்குடி துறைமுகம் பள்ளி, காரப்பேட்டை பெண்கள் பள்ளி தலா 2 மாணவிகளும் தூத்துக்குடி வி.ஜி.எஸ் பள்ளி, ஆறுமுகனேரி கே.ஏ பள்ளி, தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பள்ளி, ரங்கநாதபுரம் சி.எம். மேல்நிலைப்பள்ளி, நாசரேத் சென்ஜான்ஸ் பெண்கள் பள்ளி, ஹோலிகிராஸ் பெண்கள் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாணவியும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கல்வி மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 99.2 சதவீதம், ஆங்கில பாடத்தில் 97.63 சதவீதம், கணித பாடத்தில் 97.97 சதவீதம், அறிவியல் பாடத்தில் 97.79 சதவீதம், சமூக அறிவியல் பாடத்தில் 98.88 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். தமிழில் 8 பேர் மட்டுமே பெயில் ஆகியுள்ளனர். ஆங்கிலத்தில் 89 பேர், கணிதத்தில் 102 பேர், அறிவியலில் 111 பேர், சமூக அறிவியலில் 37 பேர் பெயில் ஆகியுள்ளனர். கணித பாடத்தில் 510 மாணவ, மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 137 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 16 பேரும் நூற்றுக்கு நூறு மார்க் (சென்டம்) பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நன்றி:
தினமலர் (03.06.2011) |