கடந்த மே மாதம் 28, 29 தேதிகளில் காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) சார்பில் குட்டியாப்பள்ளி வளாகத்தில், “வெற்றியை நோக்கி” என்ற தலைப்பில் இஸ்லாமிய இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.
அம்மாநாட்டின்போது, தஃவா சென்டர் துவக்கப்பட்ட வரலாறு, இன்று வரையிலான அதன் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிக்கையாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வறிக்கை பின்வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
காயல்பட்டணம் தஃவா சென்டர் - ஓர் அறிமுகம்!
அன்பின் சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
தஃவா சென்டர் அன்றும் இன்றும்:
தமிழகத்தில் இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் இறைப்பணிகளை நமக்கு முன்னால் பல அமைப்புகள் செய்துவருகின்றன. அந்த சகோதர அமைப்புகளோடு நமது தஃவா சென்டரும் இப்பணியில் இணைந்;து கொண்டது அல்ஹம்துலில்லாஹ். நமது தஃவா சென்டரை அறிமுகப்படுத்தும் முன் அது இயங்கிவரும் ஊரான காயல்பட்டணத்தை பற்றிய சிறு அறிமுகம் இதோ…
வங்கக்கடலோரம் ஆர்ப்பரிக்கும் கடலோடு ரீங்காரமீடும் பாங்கொலியும், அழகிய பள்ளிவாசல்களும் கொண்ட நகரம் காயல்பட்டணம். 1200 வருடத்திற்கு முன்பே இங்கு வந்த அரபுகள் இஸ்லாமை எடுத்துரைத்து இன்று அல்லாஹ்வுடைய கிருபையால் 40 பள்ளிவாசல்கள் கொண்ட ஒரு நகராட்சியாக விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே மதுபாண கடைகளும், சினிமா தியேட்டரும், காவல் நிலையமும் இல்லாத ஒரே நகராட்சியாக விளங்கி வருகின்றது காயல்பட்டணம் நகராட்சி என்றால் அது மிகையில்லை. அல்ஹம்துலில்லாஹ்.
காயல்பட்டணம் முஸ்லிம் மக்கள் ஆரம்பகாலத்திலிருந்தே இஸ்லாத்தை மற்ற மக்களுக்கு சிறுக சிறுக எடுத்துச்சொல்வதும், இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்ட நல்லுள்ளங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதும் தமிழக மக்கள் அறிந்ததே. தூய இஸ்லாத்தை தூயமுறையில் ஆரம்பகாலத்தில் காயல்பட்டணம் பகுதியில் எடுத்துரைத்தவா;களில் முக்கியமானவர்கள் பலா; உள்ளனா;.அவர்கள் அனைவருமே இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூறத் தக்கவர்கள். அவர்களில் மர்ஹூம் சகோதரர் எஸ்.கே.மாமா, சகோதரர் சிம்ஸன் உமர் காக்கா மற்றும் மொகுதூம் காக்கா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பின்னர் மௌலவி ஹாமித் பக்ரீ அவர்கள் தலைமையிலான குழு 1997இல் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற பெயரில் இந்த தஃவா சென்டரை நடத்த ஆரம்பித்தது. அதே நேரத்தில் காயல்பட்டணத்தைச் சார்ந்த சகோ எம்.ஏ.ஃபாயிஸ், சகோ எம்.ஐ.முஹம்மது முஹிய்யத்தீன் ஆகியோர் காங்கயத்திலும் இப்பணியை செய்து வந்தனர்.
பின்னர் எல்லோரும் ஒன்றாக இணைந்து காயல்பட்டணத்தை மையமாக வைத்து தஃவா சென்டரை தமிழக அளவில் நடத்துவது என்று தீர்மானித்து, அதனடிப்படையில் மாவட்டம் தோறும் 3 நாள் தஃவா சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இஸ்லாமைத் தழுவிய பெண்களுக்கு 100 நாட்கள் அடிப்படைக் கல்வி அன்னை ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் வைத்து ஆரம்பிக்கப்பட்டு தஃவா சென்டரின் செலவில் நடத்தப்பட்டது.
இதன் மேலாளராக கடையநல்லூரைச் சார்ந்த மௌலவி ஜஃபருல்லாஹ் அவர்கள் 8 வருடகாலங்களாக பணியாற்றினார்கள். மேலும் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட சகோதரர்களுக்கான 2 வருட தஃவா கல்வி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
பெண்கள் தஃவா சென்டருடைய வரலாறும் வளர்ச்சியும்:
அல்லாஹ்டைய மாபெரும் கிருபையால் சகோதரர் மௌலவி ஹாமித் பக்ரீ மன்பஈ அவர்கள் தலைமையிலான நிர்வாகம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரிகளுக்காக 1997இல் 4 மாத இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை ஆயிஷா சித்திகா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் வைத்து துவங்கியது. அதனுடைய முழு செலவையும் த.ஃவா சென்டர் பொறுப்பேற்றது. அதன்பின்னா. 2003இல் எஸ்.என்.சுல்தான் (பாளையங்கோட்டை) அவர்கள் தலைமையில் இயங்கியது.
குழந்தைகளோடு வந்து படிப்பவர்கள் படிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பிச்செல்வதால் 2005ஆம் வருடம் ஜீலை மாதம் தனியாக வீடு வாடகைக்கு பிடிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. பல வீடுகள் மாறி மாறி, பல பிரச்னைகளை எதிர்கொண்டு, அல்லாஹ்வுடைய கிருபையினால் நாம் இன்று நமது சொந்த கட்டிடத்திற்கு குடிபெயர்ந்துள்ளோம், அல்ஹம்துலில்லாஹ்!
இன்னும் தஃவா சென்டர் கல்வியகம் புனித குர்ஆன் கல்லூரி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட பெண்களுக்கான தஃவா சென்டர் நம்முடையதுதான் என்பதை அல்லாஹ்வை புகழ்ந்தவாறு உங்களுக்கு தெரிவிக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.
முஸ்லிம் பெண்களுக்கான சீர்திருத்த கல்வி:
பிறருடைய தூண்டுகோள்களினாலும் சரியான வளர்ப்பு இல்லாமையாலும், கெட்ட தோழமையாலும், முஸ்லிமல்லாதவரை திருமணம் செய்து, அதற்காக இஸ்லாமை விட்டும் வெளியேறியவர்கள், அவ்வாறு வெளியேற ஆயத்தமாக இருந்த பெண்கள் உள்ளிட்டோரை நல்வழிப்படுத்துவதற்காக 100 நாள் அடிப்படைக் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
நமது தஃவா சென்டருடைய வளர்ச்சிக்காக பங்கெடுத்த
பெண் ஆசிரியைகள் மற்றும் பெண் பொறுப்பாளர்கள்:
சகோதரி எஸ்.எம்.ஆயிஷா (காயல்) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி எம்.எஸ்.ஃபாத்திமா (காயல்) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி ஷரீஃபா (காயல்) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி சித்தி நிஸ்ஃபா (குலசை) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி ஆசியா (குன்னூர்) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி ஃபாத்திமா ஜான் (திருச்சி) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி அஸ்மா (கீழக்கரை) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி மீராஉம்மாள் (குலசை) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி காதர் நிஸா (சாத்தான்குளம்) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி யாஸ்மின் (தங்கச்சிமடம்) ஆலிமா ஸித்தீக்கியா அவர்கள்
சகோதரி ஆசியா அவர்கள்
சகோதரி தாஹிரா (கட்டா) அவர்கள்
சகோதரி ஹபிபு ஆயிஷா அவர்கள்
சகோதரி முத்து கதிஜா அவர்கள்
சகோதரி செய்யது ஆயிஷா அவர்கள்
சகோதரி நஃபீஸா அவர்கள்
சகோதரி மரியம்(தையல் பயிற்சி) அவர்கள்
படித்தவர்கள்:
இதுவரை 1000க்கும் மேற்பட்ட சகோதரிகள் 30 குழந்தைகளும் படித்துசென்றுள்ளனர், அல்ஹம்துலில்லாஹ். தமழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளம், மும்பை, அஸ்ஸாம் மற்றும் இலங்கையிலிருந்தும் சகோதரிகள் படித்து சென்றுள்ளனர்.
பெண்கள் தஃவா குழுவில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுள்ள முக்கிய பொறுப்பாளர்கள்:
சகோதரி தாஹிரா (கட்டா)
சகோதரி ஹபிபு ஆயிஷா
சகோதரி முத்து கதிஜா
சகோதரி செய்யது ஆயிஷா
சகோதரி நஃபீஸா
சகோதரி ஆசியா
தற்போது சகோதரி ஆசியா அவர்கள் பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சகோதரி நுஜ்ஹா அவர்கள் கூடுதல் அக்கறைக் கொண்டுள்ளார்.
தஃவாவிற்கு வந்த முக்கிய சகோதரிகள்:
மேற்கண்ட சகோதரிகளுடன்
சகோதரி மர்ஜூனா
சகோதரி தீனார்
சகோதரி தாஹா
சகோதரி நர்கிஸ்
சகோதரி ரஃபீக்கா
சகோதரி கதீஜத்
சகோதரி ஜுஹரா
ஆகிய மூத்த சகோதரிகளும், ஆயிஷா சித்திகா மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியைகள் பலரும் இந்த தஃவா கேஃம்பில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
ஆண்கள் தஃவா சென்டர் வரலாறும், வளர்ச்சியும்:
அல்லாஹ்வின் பேரருளால் 1999ஆம் ஆண்டு காயல்பட்டணம் சகோதரர்கள் எம்.எம்.உவைஸ் மற்றும் ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ் ஆகியோரின் முயற்சியில் ஆண்கள் தஃவா சென்டர் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) என்று அழைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டையைச் சார்ந்த சகோதரர் சுல்தான் தலைவராகவும்,
காயல்பட்டணத்தை சார்ந்த சகோதரர் எம்.ஏ.புகாரீ,
சகோதரர் எம்.எஸ்.ஷம்சுத்தீன்,
ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ்
ஆகியோர் இதர நிர்வாகிகளாகவும் இருந்தனர்.
ஆசிரியர்களாக,
பூச்சிக்காட்டைச் சார்ந்த மௌலவி முஜீபுர்ரஹ்மான் ஃபாஸீ,
காயல்பட்டணத்தை சார்ந்த ஹாஃபிழ் நெய்னா முஹம்மது,
மேலப்பாளையத்தைச் சார்ந்த மௌலவி சிந்தா ஃபாஸீ
ஆகியோர் பணியாற்றினர்.
மேலாளராக
காயல்பட்டணம் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்,
கயத்தார் அலாவுத்தீன்
ஆகியோர் பணியாற்றினர்.
பின்னர் மௌலவி அப்துல் காதர் மன்பஈ அவர்கள் ஆசிரியராக இருந்தார்கள். தற்சமயம் சகோதரர் டி.வி.செய்யது ஜக்கரிய்யா அவர்கள் மேலாளராக பணியாற்றி வருகின்றார்கள்.
தற்போது,
காயல்பட்டணம் சகோதரர் எம்.ஏ.புகாரீ அவர்கள் தலைவராகவும்,
சகோதரர் அல்தாஃப்,
ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ்
ஆகியோர் இதர நிர்வாகிகளாகவும் செயலாற்றி வருகிறார்கள்.
தற்போது காயல்பட்டணத்தைச் சார்ந்த
மௌலவி ஷேக் அலி ஃபிர்தவ்ஸீ,
ஹாஃபிழ் நெய்னா முஹம்மது,
செங்கோட்டையைச் சார்ந்த சகோதரர் பிலால்
ஆகியோர் ஆசிரியர்களாகவும்,
சகோதரர் உமர்,
சகோதரர் ஆரிஸ்,
சகோதரர் சித்தீக்,
சகோதரர் சல்மான்
ஆகியோர் பொறுப்பாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
படித்தவர்கள்:
நமது தஃவா சென்டரில் கல்வி கற்றவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 3000 ஆகும். அதில் 900க்கும் மேற்பட்ட சகோதரர்கள், 30 சிறுவர்களும் நமது தஃவா சென்டரில் மூன்று மாதங்கள் அடிப்படை கல்விகயை முழுமையாகக் கற்றுச் சென்றுள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்.
தஃவா சென்டர் முயற்சியில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது தஃவா சென்டரின் மூலமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த சகோதரர்களும் படித்துச் சென்றுள்ளனர் என்பதையும் அறியத் தருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
புனித குர்ஆன் கல்லூரியில் நடத்தப்படும் பாடங்களும் பயிற்சிகளும்:
1. அகீதா (கொள்கை)
2. சீறா ( வரலாறு)
3. அஹ்லாக் (நற்பண்புகள்)
4. திலாவத்துல் குர்ஆன்
5. சூராக்கள் மற்றும் துஆக்கள் மனனம் செய்தல்
6. உறவுகளோடு நல்ல முறையில் உறவாட கவுன்சிலிங் கோர்ஸ்
7. மனோரீதியாக மாற்றம் ஏற்படுத்தவும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் வாழ்வின் வழியில் பயிற்சி வகுப்புகள்
8. பேச்சுப் பயிற்சியும் மற்றும் தஃவா நேரடிப்பயிற்சியும் வழங்கப்படுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
புதிய கட்டிடம்:
பழைய வாடகை கட்டிடத்திலேயே அனைத்து பணிகளையும் செய்து வந்த தஃவா சென்டருக்கு கோல்டன் எஜுகேஷனல் ட்ரஸ்ட் என்ற பெயரில் 2005ஆம் ஆண்டு அல்லாஹ்வின் பேரருளால் நிலம் வாங்கப்பட்டு, கட்டிட வேலைகள் துவக்கப்பட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கட்டிடத்தின் கீழ்தளம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ். தஃவா சென்டரின் செயலாளர் சகோதரர் அல்தாஃப் அவர்கள், கட்டிட கட்டுமானப் பணியின் மேற்பார்வையாளராக இருந்தார். மேல்தள தங்குமிடத்திற்காக பொருளாதார உதவியை வல்ல ரஹ்மானிடம் எதிர்பார்த்தவர்களாக இருக்கிறோம்.
நாம் செய்துவரும் பணிகள்:
Ø இஸ்லாத்தை எடுத்து சொல்லும் 3 நாள் தஃவா கேம்ப் ஆண்களுக்காக.
Ø இஸ்லாத்தை எடுத்து சொல்லும் 1 நாள் தஃவா கேம்ப் பெண்களுக்காக.
Ø இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு 100 நாட்கள் பயிற்சி முகாம்.
Ø இஸ்லாத்தை தழுவிய சகோதரிகளுக்கு 100 நாட்கள் பயிற்சி முகாம்.
Ø கோடைகால பயிற்சி முகாம்.
Ø 18 தலைப்புகளில் சிற்றேடுகள்.
Ø திருக்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் இலவச வினியோகம்.
Ø ஸ்டிக்கர்கள் வெளியீடுகள்.
Ø முஸ்லிம் மக்களுக்கு தஸ்கிய்யா மற்றும் தர்பிய்யா பயிற்சிகள்.
Ø ப்ரொஜெக்டர் மூலம் பவர் பாய்ண்ட் நிகழ்ச்சிகள்.
Ø முஸ்லிம்களிம் சீர்திருத்த பிரச்சாரம்.
Ø அரங்குகளில் கேள்வி பதில் நிகழ்ச்சி (முஸ்லிமல்லாதோருக்காக...)
Ø இஸ்லாமை தழுவிய கிராமங்களுக்கு ஃபித்ரா, குர்பானி ஏற்பாடுகள்.
Ø இஸ்லாமை தழுவிய மக்களுக்கு சிறுதொழில், கல்வி மற்றும் மருத்துவ உதவிகள்.
தஃவா சென்டருக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள்:
சகோதரர் மௌலவி ஜஃபருல்லாஹ் அவர்கள்,
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள்,
மர்ஹூம் எம்.எல்.சாகுல் ஹமீது என்ற எஸ்.கே. மாமா அவர்கள்,
சகோதரர் ஷம்சுத்தீன் (முன்னாள் செயலாளர்) அவர்கள்,
மௌலவி அப்துல் மஜீத் மஹ்ழரீ அவர்கள்,
தஃவா மையத்திற்காக வாடகையின்றி இடம் தந்து உதவிய சகோதரர் எஸ்.எம். இப்ராகிம் அவர்கள்,
மௌலவி அப்துல் காதிர் மன்பஈ அவர்கள்,
சகோதரர் எஸ்.என்.சுல்தான் (பாளையங்கோட்டை) அவர்கள்,
காரமடை சகோதரர் ஸைஃபுல்லாஹ் அவர்கள்,
மேலப்பத்தையைச் சார்ந்த டாக்டர் பகத்சிங் அவர்கள்
மற்றும் பலரும் முக்கிய பங்காற்றியும், ஆற்றிக்கொண்டும் உள்ளனர்.
தற்போது நமது தஃவா சென்டரின் நிர்வாகிகளாக,
எம்.ஏ.புகாரீ (48) அவர்கள் (தலைவர்),
சகோதரர் அல்தாஃப் அவர்கள் (செயலாளர்),
தஃவா சென்டர் துவக்கத்திலிருந்தே பணியில் ஈடுபட்டுவரும் ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ் அவர்கள் (பொருளாளர் - பொறுப்பு)
ஆகியோர் தன்னலம் பாராது பணியாற்றி வருகின்றனர்.
தஃவா சென்டரின் வாழ்வில் உதவிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் நன்னெஞ்சங்கள்:
இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.), காயல்பட்டணம்,
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், காயல்பட்டணம்,
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, காயல்பட்டணம்,
குட்டியா பள்ளிவாசல், காயல்பட்டணம்
கே.எம்.டி. மருத்துவமனை, காயல்பட்டணம்,
பணி சிறக்க உணவு, உடை, உறைவிடம் தந்தோர், நிதியளித்த காயல்பட்டணம் மக்கள்.
ஜம்இய்யத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
IGC, குவைத்,
Trust of Holy Quran,
அன்ஸார் மர்கஸ், யு.கே.,
மேலும் உள்ளூர், உள்நாடு மற்றும் வெளிநாடு சகோதர, சகோதரிகள்,
குறிப்பாக சவுதி அரேபியாவின் தம்மாம், ரியாத், ஜித்தா நகரிலுள்ள அனைத்து காயல்வாசிகள்,
ஐக்கிய அரபு அமீரகம், கத்தர், குவைத் மற்றும் ஹாங்காங் வாழ் காயல் சகோதர சகோதரிகள்...
இவர்கள் அளித்து வரும் விலைமதிக்க முடியாத ஒத்துழைப்புகள் மிகவும் தஃவா சென்டரின் தொய்வற்ற நற்பணிகளுக்கு இன்றியமையாத காரணிகளாகும்.
அவர்கள் அனைவருக்கும் நமது தஃவா சென்டா சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், ஜஸாஹுமுல்லாஹு கைரா...
வேண்டுகோள்:
அன்பானவர்களே!
மேற்சொன்னவற்றையும், இன்னும் தஃவா தொடர்பான பலவற்றையும் தயக்கமின்றி செய்து வருகிற, செய்யக் காத்திருக்கிற நமது தஃவா சென்டரின் நிர்வாகச் செலவிற்காகவும், நமது புதிய கட்டிடத்தின் மேல் தளத்தில் ஹாஸ்டல் கட்டப்படுவதற்காகவும் ஏராளமான பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்றது. தயாள உள்ளம் படைத்த தாங்கள் இவ்வரிய இறைப்பணிக்கு உதவி செய்வதன் மூலம், மறுமை ஆதாயத்தை நிறைவாகப் பெறுவீர்களாக!
எங்களது இறைவா! எங்களுடைய பாவங்கள் யாவற்றையும் மன்னித்து ஈருலகிலும் வெற்றியை தந்தருள்வாயாக!
தொடர்புக்கு:
சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) ,
228ஏ, அலியார் தெரு, காயல்பட்டணம்,
தூத்துக்குடி மாவட்டம்.
தொடர்பு எண்கள்:
+91 98421 77609
+91 91500 50554
+91 91500 50556
+91 91500 50557
+91 91505 38219
மின்னஞ்சல்:
ceshkpm@yahoo.com
வலைதளம்:
http://www.cesh.org.in
இவ்வாறு அந்த அறிக்கை அமைந்திருந்தது.
தகவல்:
தஃவா சென்டர் சார்பாக,
ஆரிஸ் கான். |