தேசிய மாணவர் தர நிர்ணய குழுமம் (National Convention on
Students' Quality Circles - NCSQC), உலக கல்வி தரம் மற்றும்
மேன்மையாக்க மையம் (World Council for Total Quality & Excellence in
Education -WCTQ), மற்றும் லக்ஷ்மி வித்யா சங்கம் ஆகிய
நிறுவனங்கள் இணைந்து தேசிய அளவிலான பள்ளிகளுக்கியிலான திட்ட
ஆய்வு (Case Study) மற்றும் ஆங்கில மொழி பேச்சுப் போட்டிகளை
மதுரையில் 3 தினங்களாக நடத்தின.
இந்தியா முழுவதிலிமிருந்து பல மாநிலங்களிலிருந்து 82 பள்ளிகளைச் சார்ந்த மாணவ-மாணவியர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். ஆங்கிலத்தில் சரளமான
பேச்சுத்திறன், பிரச்சனைகளுக்கு தீர்வு கூறும் நுணுக்கமான அறிவு,
புரொஜெக்டர் போன்ற சாதனங்களை சமயோசிதமாமாக கையாளுதல் உள்ளிட்ட
திறமைகளை பரிசோதித்து அறியும் கடினமான மாணாக்கர் தர
நிர்ணயப் போட்டியில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்
நகராட்சிக்குட்பட்ட சாகுபுரம் கமலாவதி மேனிலைப்பள்ளி
மாணவர்கள் முதலிடம் பெற்று வெற்றிக் கேடயத்தை தட்டிச் சென்றனர்.
வெற்றிபெற்ற கமலாவதி மேனிலைப்பள்ளி மாணவர் குழுமத்தில், ஐக்கிய அரபு அமீரகம் அபூதபி அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல்பட்டினத்தைச் சார்ந்த எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் என்பவரது மகன் எஸ்.எச்.ஷேக் ஹமீத், ஷாஃபி ஆகிய மாணவர்களும், ரிஸ்வியா, உம்மு அய்மன்
ஆகிய மாணவியரும் அடங்குவர். தேசிய அளவில் முதலிடம் பெற்றமைக்காக கமலாவதி
மேனிலைப் பள்ளிக்கு வெற்றிக் கேடயமும், மாணவ-மாணவியருக்கு, தனித்தனியே
பாராட்டுக் கேடயமும், பெருமைமிகு இஷிகாவ (ISHIKAWA) பாராட்டு
சான்றிதழும் வழங்கப்பட்டன.
தகவல்:
எம்.ஐ.தீபி,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |