ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் Emirates Inida Fraternity Forum (EIFF) அமைப்பின் சார்பில், வரும் 10.06.2011 வெள்ளிக்கிழமையன்று மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை, துபை - அல்கிஸஸிலுள்ள என்.எம்.சி. மருத்துவமனை அருகிலிருக்கும் சென்ட்ரல் ஸ்கூல் வளாகத்தில், இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
Better Family! Better Society!! என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில்,
“நம்மை நாமே புனரமைப்போம்” எனும் தலைப்பில் வலசை ஃபைஸல்,
“குடும்பத்தைப் புனரமைப்போம்” எனும் தலைப்பில் காயல்பட்டினத்தைச் சார்ந்த எம்.எஸ்.அப்துல் ஹமீத்,
“சமூகத்தைப் புனரமைப்போம்” எனும் தலைப்பில் செய்யித் அலீ
ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் தம் குடும்பத்தினருடன் பங்கேற்கவும், பெண்களுக்கு தனியிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களுக்கு, 050 - 4265783 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறும், நிகழ்ச்சி மிகச்சரியாக மாலை 06.00 மணிக்கு துவங்கவுள்ளதால் குறித்த நேரத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். |