தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியளராக முனைவர் ஆர்.செல்வராஜ் இன்று காலை 10.00 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, இதுவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி, தற்சமயம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கச் செல்லவிருக்கும் முனைவர் சி.நா.மகேஷ்வரன், புதிய ஆட்சியரிடம் பொறுப்புகளைக் கையளித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வை.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன், உதவி அலுவலர்கள் காந்தி, ப்ரைட் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். |