Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:24:17 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6402
#KOTW6402
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 7, 2011
டாக்டர் அஷ்ரப் - மருத்துவர்கள் கழக தலைவராக தேர்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4490 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தை சார்ந்த டாக்டர் அஷ்ரப் - இந்திய பொது மருத்துவர்கள் கழகத்தின் (Association of Physicians of India) தமிழ் நாடு கிளை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கொடைக்கானலில் நடந்த அக்கழகத்தின் வருடாந்திர மாநாட்டின் போது, 2011 - 2012 பருவதிற்க்கான தலைவராக டாக்டர் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டார். இப்பொறுப்பினை - 2010 - 2011 பருவத்தில் - பிரபல நீரிழிவு நோய் நிபுணர் விஜய் விஸ்வநாதன் வகித்து வந்தார்.



புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டு அம்மாநாட்டில் பேசிய டாக்டர் அஷ்ரப் கூறியதாவது:-

சர்க்கரை நோய்க்கு அடுத்தப்படியாக ரத்த சோகை நோய் (Anaemia) பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் அறிவுக்கூர்மை (IQ) - 5 முதல் 10 எண்கள் குறைந்து இருக்கும். திருமண வயதுக்கு முற்பட்ட திருமணமும், விரைவில் கருவுற்றலும், இப்பிரச்சனையால் மேலும் பாதிப்பை உண்டாக்கும். எனவே தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் அனைத்து கிளைகளும், பள்ளி, கல்லூரி மாணவிகளை சோதித்து ரத்த சோகை நோயை கண்டு பிடித்து அதற்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கி இந்த நோய் வராமல் தடுக்க பாடுபடவேண்டும்.

இவ்வாறு டாக்டர் அஷ்ரப் தனது உரையில் தெரிவித்தார்.

டாக்டர் அஷ்ரப் - திருச்சியில் ஆய்ஷா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு மருத்துவ துறை சேவைக்காக வழங்கப்படும் பி.சி.ராய் விருதினை இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டிலிடம் இருந்து இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
எஸ்.எஸ்.எம். சதக்கத்துல்லாஹ்,
சென்னை.


புகைப்படம்:
தி ஹிந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இனி இவர் வகிக்கும் பொருப்பொன்றுமில்லை..........
posted by Shameemul Islam SKS (Chennai) [07 June 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 5105

மருத்துவ துறையில் இனி இவர் வகிக்கும் பொருப்பொன்றுமில்லை என்னும் அளவில் மேன்மேலும் பொறுப்புகளை வகித்து வரும் அன்பின் டாக்டர் அவர்களை மனமார வாழ்த்துகிறோம்.

ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ். மற்றும் குடும்பத்தினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்வாழ்த்துக்கள்
posted by nowshad (Steel City) [07 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5106

நல்வாழ்த்துக்கள் டாக்டர் அஷ்ரப் அவர்களின் மருத்துவப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நாங்களும் பெருமைப்படுகிறோம் உங்களால்.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [08 June 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5107

சந்தோசமான நிகழ்வு.

சரியான, தகுதியான நபருக்கு சரியான,தகுதியான பதவி தான்.

டாக்டர் அஷ்ரப் அவர்களுக்கு பாராட்டுக்கள். மேலும் காயலுக்கு பெருமை சேர்த்ததற்கு நன்றிகள் பல. நாங்களும் பெருமைப்படுகிறோம் உங்களால்.

பல வளங்கள் பெற்று மன நிம்மதியுடன் வாழ துஆ செய்யும் அன்பு நெஞ்சம்.

சாளை S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காயலுக்கு கிடைத்துக்கொண்டு இருக்கும் அங்கீகாரத்தில் ஒன்று.
posted by zubair (riyadh) [08 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5108

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு டாக்டர் அஷ்ரப் அவர்களுக்கு எனது நல் வாழ்த்துகள். தாங்கள் காயலுக்கு பெருமை சேர்த்து தந்ததில் மிக்க மகிழ்ச்சி. தாங்களின் இலச்சியம்கள் சுலபமாக நிறைவேற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நல்வாழ்த்துக்கள்.!
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen.Mahlari. (Singapore.) [08 June 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 5109

நமது காயல் மாநகரத்தை சேர்ந்த டாக்டர் அஸ்ரப் அவர்கள் இந்திய பொது மருத்துவர்கள் கழகத்தின் (Association of Physicians of India) தமிழ்நாடு கிளை தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இரட்டை மகிழ்ச்சிக்குரியதாகும். ஒன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு. மற்றது நமது காயல் மாநகரத்திற்கு.

டாக்டர் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் நீடித்தஆயுளையும்,நிறைந்த வளங்களையும் வழங்கி மக்கள் யாவர்களுக்கும் மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்கிட தௌபீக் செய்தருள்வானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்து...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [08 June 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5111

வாழ்த்துக்கள் டாக்டர் சார்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வாழ்துக்கள்
posted by shaik abbul cader (kayalpatnam) [08 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5112

டாக்டர் அவர்களுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வாழ்த்துக்கள்
posted by vsm ali (Kangxi, Jiangmen , China ) [08 June 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 5113

தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மருத்துவ சேவையை மட்டும் செய்யவில்லை
posted by STAR TEXTILES - MAIN ROAD (KAYALPATNAM) [08 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5114

இவர் மருத்துவ சேவையை மட்டும் செய்யவில்லை ஊரில் நல்ல கல்வி சேவையையும் செய்து வருகிறார், இவரின் சேவை - நமக்கு தேவை... ஊர் மக்களின் பாராட்டை பெற்றவர் மற்றும் நம் நாட்டு மக்களின் பாராட்டையும் பெற்றவர் ஆவர் - என் வாழ்த்துக்கள் அன்புடன் முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கலா நிதி அஷ்ரப்
posted by mackie noohuthambi (kayalpatnam) [08 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5117

தாங்கள் பெற்றுள்ள பொறுப்பு மிகவும தகுதி வாய்ந்தவருக்கு கிடைத்துள்ள பொறுப்பு. இதனை இதனால் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்று வள்ளுவம் சொல்கிறது. வாழ்த்துக்கள் அல்ஹம்து லில்லாஹ்.இந்த மண்ணின் மைந்தனுக்கு கிடைத்துள்ள மகிமையில் நான் புளகாங்கிதம் அடைகிறேன். தாய்மை அடைவதை தள்ளிப்போடக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்வதிலிருந்து நீங்கள் வேறு படுகிரீர்களே அது எப்படி? முப்பது வயதுக்கு மேலே போனால் தாய்மை அடைவது சிரமம் என்று சொல்கிறார்களே? இந்த விஷயத்தை ஒரு கலந்துரையாடல் மூலம் நமதூர் பெண்களுக்கு விளக்க, தாங்கள் ஒருமுறை நமதூருக்கு வந்தால் என்ன? சிவப்புக்கம்பள வரவேற்பு உங்களுக்கு காத்திருக்கிறது வாருங்கள், நல ஆலோசனைகள் வழங்குங்கள் என வேண்டிக்கொள்கிறேன்.9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வாழ்த்துக்கள்
posted by Lebbai Zatni (Riyadh) [08 June 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5119

வாழ்த்துக்கள். தங்கள் சமுதாய பணி மென்மேலும் தொடர வல்ல இறைவன் அருள்பாளிப்பனாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. பணி சிறக்க வாழ்த்துக்கள்...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [08 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5121

மக்களின் பிணி நீங்க பாடுபட்டு வரும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்ச்பிரதியன்
posted by Seyed Ibrahim S.R. (Dubai) [08 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5123

Congrats Dr. Dr.Ashraf is one of the main inspiring personalities among the Kayalites.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. CONGRAGULATION
posted by muhammed ibrahim 48 (kpm) [08 June 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 5127

CONGRATS TO OUR KAYAL GOOD PERSONALITY FOR HIS NEW RESPONSIBLE PRESIDENTIAL POST OF HIS STATE ASSOCIATION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. வாழ்த்துக்கள்.
posted by sithi katheeja (kayal patnam) [08 June 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 5131

நமது ஊருக்கு பெருமை தேடித் தந்த டாக்டர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களின் மருத்துவ சேவையில் இன்னும் பல சாதனைகள் புரிய வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. congrats
posted by ismail (Jeddah K.S.A.) [08 June 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5133

Subhanallah WISH YOU A LONGLIVE TO SAVE MANY LIVES (by the help of ALMIGHTY ALLAH)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. pray for long live
posted by ahamed musthafa (udanudi) [19 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5398

I pray for My Great un beatable only school in kayalpatnam President Janab Dr. Ashraf. MD.
wish You All the best.

Ahamed A.J. Musthfa
P.G. Asst.
L.K. Hr. School. Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. வாழ்த்துக்கள்
posted by Abdul Hadhi (Jeddah Ksa) [03 December 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14053

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு டாக்டர் அஷ்ரப் அவர்களுக்கு எனது நல் வாழ்த்துகள். தாங்கள் காயலுக்கு பெருமை சேர்த்து தந்ததில் மிக்க மகிழ்ச்சி. இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

அப்துல் ஹாதி
ஜெட்டாஹ் eta


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:டாக்டர் அஷ்ரப் - மருத்து...
posted by U.Ahamed Sulaiman (Dubai) [08 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14274

மாஷா அல்லாஹ் இவருக்கு இன்னும் பல அவார்ட்ஸ் வந்து சாரும் (அதில் பத்ம அவார்ட்ஸ் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் கிடைக்கும் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved