உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், கடந்த 28.05.2011 அன்று நடத்தப்பட்ட பொதுக்குழுவில், அதன் புதிய தலைவராத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் உள்ளிட்ட புதிய நிர்வாகக் குழுவிற்கு அமீரக காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அண்மையில் நடைபெற்ற இக்ராஃ கல்விச்சங்க பொதுக்குழுவில் சங்கத்தின் தலைவராக தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஜனாப் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதர்க்கும் மற்றும் அச்சங்கத்தின் நிர்வாக குழுவில் உள்ள வெற்றிடங்களுக்கும , புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கும் அமீரக காயல் நல மன்றம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
நகர் நலனில் அக்கறை கொண்ட டாக்டர் இத்ரீஸ் அவர்கள் தலைமையில் இக்ராஃ மென்மேலும் சாதனைகள் புரிந்து நம் நகரில் கல்வி கற்க்காதவர்களே இல்லை என்னும் அளவிற்கு நம்மவர்களின் தரம் உயர்த்த அமீரக காயல் நல மன்றம் உதவி ஒத்தாசைகளை தாராளமாய் என்றும் போல் வழங்கும், இன்ஷா அல்லாஹ்!
அதேநேரத்தில் அமீரக காயல் நல மன்றம் இக்ரா வின் முன்னாள் தலைவர் ஜனாப் பாளையம் ஹசன் அவர்கள் ஆற்றி சென்ற மக்கள் நல சேவைகளை நன்றி உணர்வோடு நினைவுகூர்ந்து பாராட்டுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |