தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்த திட்டறிக்கை கடந்தாண்டு மத்திய அமைச்சரவை முன் சமர்பிக்கப்பட்டபின், டிசம்பரில் ஒப்புதல் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து இம்மார்க்கத்தில் கப்பல்களை இயக்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் விடப்பட்டது. அதன் வாயிலாக நிறுவனம் ஒன்றும் தேர்வு செய்யப்பட்டது.
கப்பலை இயக்க ஆயத்த பணிகள் நடைபெறுவதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவித்தன. முதலில் ஜனவரி 24 அன்று சேவை துவங்கும் என செய்திகள் தெரிவித்தன. பிறகு மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனை மேற்கோள்காட்டி இச்சேவை பிப்ரவரி மாதம் துவங்கும் என செய்திகள் தெரிவித்தன.
லிப்யா நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனையை மேற்கோள்காட்டி - அங்கிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் பணியில் தூத்துக்குடி - கொழும்பு இடையே இயக்கப்பட இருந்த கப்பல் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன. ஆகவே மார்ச் மாதம் கப்பல் சேவை துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.
மார்ச் மாதம் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மே மாதம் காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் பேசிய இச்சேவையை இயக்க உள்ள நிறுவனம் ஒன்றின் நிர்வாகி ஒருவர் - அம்மாததிற்க்குள் இச்சேவை துவங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மே மாதம் சேவை துவங்கவில்லை.
தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினமலர் நேற்று வெளியிட்ட செய்தியில் ஜூன் 13 அன்று சேவை துவங்க உள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் - அச்செய்தியில் துவக்க விழா நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்க உள்ளார்கள் என்ற விபரம்வரை வெளியிடப்பட்டிருந்தது.
ஜூன் 13 க்கு நான்கு நாட்களே இருக்கும் நிலையில் - நேற்று சென்னையில் M.V. AMET MAJESTY என்ற இந்தியாவின் முதல் ஆடம்பர பயணியர் கப்பல் சேவையை (Cruise Liner) துவக்கி வைத்தப்பின் பேசிய அமைச்சர் ஜி.கே. வாசன் - தூத்துக்குடி - கொழும்பு இடையிலான சேவை - இன்னும் இரு வாரங்களில் துவக்கி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
1. Copy / Paste posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[09 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5145
May 12, 2011 (News ID # 6164 ) அன்று நான் எழுதிய கமெண்ட்ஸ் - மீண்டும் இங்கு Copy / Paste பண்ணுகிறேன்.. பரவா இல்லையா.
" வரூரூம்ம்... ஆனா... வராராது.
எத்தனை நாளைக்குதான் இழுத்துக்கொண்டேடேடே செல்வார்களோ.. தெரியவில்லை... கப்பல் போக்குவரத்து என்பதால் இப்படி இழுக்கின்றதோ என்னவோ... பார்க்கலாம்...
அப்படி துவங்கினாலும் உடனே மூடுவதற்கும் சாத்தியம் உண்டு. அந்த பாதுகாப்பு குறைவு, இந்த பாதுகாப்பு குறைவு, அவன் ஊடுருவி விட்டான், இவன் ஊடுருவி விட்டான் என்று பல காரணங்கள் சொல்லுவார்கள்.. நம்ம அரசியல்வாதிகளைப் பற்றி தெரியாதா.. "
3. இன்னல்லாஹ ஹா மஅஸ்ஸாபிரீன் posted byT.M.RAHMATHULLAH (kayalpatnam TEL. 043692808526)[09 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5148
காயலகளே கொஞ்சம நல்ல நல்ல வார்த்தைகளாய் கூறுங்களேன்= தூடி - கொழும்பு கப்பல் சேவை வரும் வரும் என்றாலே மனம் சந்தோசம்தான், வர்ற நேரம் எறிப்போவோம் .இன்ஷா அல்லாஹ் சர்யா?
6. நல்ல வார்த்தை-அது போன மாதம்.. posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[09 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5152
என்ன சகோ.தைக்கா சாஹிப் அவர்களே, "கப்பலுக்கு போன மச்சான்" பாட்டு நல்ல புடிக்குமோ. பலமுறை ரசித்து கேட்ட மாதிரி உள்ளது. ஓகே.
இப்பவே முதல்வர் அம்மா அவர்கள் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும், உறவு கூடாது என்று கூறி உள்ளார்கள். இதற்க்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளார்கள், தி.மு.க உட்பட.
அகவே ரஹ்மதுல்லாஹ் ஹாஜி சொல்லுவது போல எப்போ வருதோ அப்போ ஏறிப்போவோம்.இன்ஷாஹ் அல்லாஹ்.
நான் கமெண்ட்ஸ் பதித்தது போன மாதம்..நடப்பவை நன்மையாக இருக்கட்டும்.
(காக்கா உங்க STD கோட் நம்பரை மாற்றுங்களேன்.பல மாதமாக தவறாக உள்ளதே).
7. ஸ்ரீ லங்கா... சீ....லங்காவாக போது. posted byzubair (riyadh)[09 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5153
ஸ்ரீ லங்கா உள்நாட்டு பிரசனையால் சே...லங்காவாதான் இருந்தது. இப்பம் சீ.....லங்காவாக போகிறது. நம் மக்களுக்கு பொறுத்திருக்கலாம் முடியவில்லை ஆகையால் இந்த சின்ன புத்தியில் தோன்றியது முயற்சி பன்னினால் என்ன? அமைசர் வாசனிடம் சொல்லி விசா அடித்த பின்பு நம் கடல் மார்க்கமா தோணியில் போனால் என்ன? மேலும் கப்பல் எப்ப வருமோ..... அப்படியே வந்தாலும் எங்கயாவது தேவைபட்டால் அனுப்பியும் விடுவார்கள்.
8. இறுதி கட்டத்தில் இச்சேவையில் நிலைய ..!! posted byL.A.K.Buhary (HONG KONG)[09 June 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 5155
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற முரண்பாடுகள்(தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை) கால தாமதத்திற்கான பின்னர் மெதுவாக ஒரு கால கட்டத்தில் கிடப்பில் போடுவதற்கான அறிகுறியே என்றுதான் எண்ண தோன்றுகிறது..!(உதாரணம்:- சேது சமுத்திர திட்டம்)
இன்றைய தினம் முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டுவந்த (இலங்கையின் மீதான பொருளாதார தடை)தீர்மானம்(http://www.dinamalar.com/News_Detail.asp?Id=254432 ) ஏக மனதாக நிறைவேறியதும் கூட மத்திய அரசுக்கு விடுக்கும் மறைமுக அறிவிப்பு /எச்சரிக்கையாக கூட இருக்கலாம்.
உண்மையிலேயே இச்சேவை துவங்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அல்லது மாநில அரசுகளுக்கு இருக்குமானால்,டெண்டர் எல்லாம் முடிந்து, டெர்மினலில் கட்டுமான பணிகளும் முடிந்து, கப்பல் ஏற்பாடாகி, இறுதி கட்டத்தில் நிருத்தமாட்டார்களே..!! "எங்கள் ஆட்சி காலத்தில் தான் இது நடக்கிறது" என்ற "பெயரளவிலாவது" போட்டி போட்டு துவங்க முன்வருவார்கள்..!!
ஏன் இந்த தாமதமோ..? கிடப்பில் போன பின்பு, மத்திய அரசு மாநில அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்று குறை கூறும்.. அது போல மாநில அரசு கடலோர பாதுகாப்பு, ஊடுருவல், என்று கதைகளை சொல்லி மத்திய அரசின் முயற்சியால் நடைபெறும் இந்த சேவையால் எங்கே மக்கள் மத்தியில் அவர்களுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்று கூட எண்ணி தடை செய்யலாம்.
இதன் பின்னணியில் என்னவெல்லாம் அரசியல் மர்மம் நடக்கிறது என்று யாரறிவார்..?
தூத்துக்குடி - கொழும்பு -கப்பல் சேவை என்று துவங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நமக்கு இந்த சேவை நேற்று, இன்று, நாளை என புலி வருகிறது, புலி வருகிறது என்ற கதையாக உள்ளது.
"சேது சமுத்திரத் திட்டம் மிகவும் சாதுவாக கடலிலே சமாதியாகிவிட்டது போன்று இதுவும் ஆகிவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது. ஒரு வேளை மத்திய அரசாங்க கப்பல் போக்குவரத்து துறை இந்த சேவைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு கப்பல், இன்னொரு கப்பலில் வந்துக் கொண்டு இருக்கிறது என கப்பல் விடுவார்களோ என தெரியவில்லை.
எப்படி இருந்தாலும் "கப்பல் வரும் என நினைத்து நமது மனக்கப்பலை அலைபாய விடாமல் நமது உள்ளத்திற்கு "கப்பம்" கட்டிக்கொண்டு இருப்போம்.
10. கப்பல் கதையும் அதே கதைதான்......... posted byShameemul Islam SKS (Chennai)[10 June 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 5158
இது மக்கள் நலம் நாடும் அரசா அல்லது அரசியல்வாதிகள் நலம் நாடும் அரசா????? ஒன்றுமே புரியவில்லை.
இவர்கள் அரசியல் காரணங்களுக்கெல்லாம் மக்கள்தான் பலிகடாவாக வேண்டி இருக்கிறது.
அமைதியான குடும்ப வாழ்வு, அயல் நாட்டில் வணிகம், அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் உடனான உறவு மேம்பாடு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழ்வு, தரமான கல்வி, ஊழலற்ற நிர்வாகம் என்பன போன்ற எண்ணற்ற விஷயங்கள் மக்கள் நலம் நாடும் அரசுகள் முன் முன்னிலை பெறுபவை.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் ஒன்றுதான் என்பது போன்று முந்தைய அரசு அல்லது மத்திய அரசு ஏதாவது நல்லது செய்தது என மக்களிடம் பெயர் வாங்கி விடக்கூடாது என கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதுதான் பிந்தைய அரசின் அல்லது மாநில அரசின் போக்காகவே இருந்து வருகிறது.
கப்பல் கதையும் அதே கதைதான்.
வாக்களித்த மக்களோ ஆங்கில பழமொழியில் வரும் "Caught between the devil and the deep sea" என்பது போல பேய்க்கும், பெருங்கடலுக்கும் மத்தியில் அகப்பட்ட கதைதான்.
தனது வெற்றியை மக்களின் வெற்றியாக பெருமிதத்துடன் கூறிய அம்மா அவர்கள், தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காது மக்கள் நலம் நாடும் அரசை (WELFARE STATE)ஐ
வழங்குவதுதான் மக்களுக்கு செலுத்தும் நீதியாகும்.
11. கப்பல் - பெட்ரோல் விலை அதிகரிப்பு posted byhasbullah mackie (dubai)[10 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5159
கப்பலை இயக்குவதற்கு தடை பெட்ரோல் விலையேற்றம்தான் காரணம். டிக்கெட் விலை குறைவாக அறிவித்து விட்டு அதே விலையில் போகிறதென்றால் யோசிக்கவேண்டிய விஷயம் தான் ...போதிய ஆள்கள் பயனிக்கவில்லைஎன்றால் என்ன நிலை ஆகும். முதல் கப்பலில் புக்கிங் full தானா என்பது தெரியாது. ரூம் போட்டு யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
மெட்ரோ TRAM சர்வீஸ் தொடங்கி விடலாம் EASY ஆக
ஆனால் கப்பல் போக்குவரத்து அப்படி அல்லவே? முதல் கப்பலே TITANIC கப்பல் ஆகி விடுமோ என்ற அச்சம் தான் அல்லது
நம்ம ஜெயா அம்மாவோட புதிய இல்லதாக்கும் திட்டத்தில்
உள்ளதோ? பொறுத்திருந்து பார்போம்.
ஆமாம்! முதல் கப்பலில் காயலர்களின் பயணம் இருக்குமோ?
12. எங்கும் அம்மா எதிலும் அம்மா எல்லாம் அம்மா அம்மம்மா தாங்கலையே! posted bykavimagan (dubai)[10 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5160
கப்பல் போக்குவரத்து என்பது முழுக்க முழுக்க மத்திய
அரசுக்கு உட்பட்டது. அதன் மந்திரியாக திரு.வாசன் அவர்கள்
பொறுப்பு வகிக்கின்றார். இத்தனை கேவலத்திற்குப் பிறகும்
தி.மு.க.வும் மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. உண்மை
இப்படியிருக்க, இந்தப் பிரச்சினையில் எங்கிருந்து வந்தார் அம்மா?
கைவிடப்பட்ட மேலவை, கையாலாகாத தலைமைச் செயலகம்,
கைக்கு கிட்டி வாய்க்கு கிட்டாமல் போன சமச்சீர் கல்வி,
இவற்றுள் வேண்டுமானால் அம்மாவின் கை இருக்கலாம்.
ஆனால் கப்பல் பிரச்சினையில் தெரிவது காங்கிரசின் கைகளே! தற்போதைய தேவை, எதிலும் செயல்படாத மன்மோகன் அரசு, இதிலாவது செயல்படும் என்று நம்பிக்கை வைப்பதே!
13. சின்ன கப்பல் posted byசாளை நவாஸ் (singapore)[10 June 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 5161
பேசாமே நம்ம சின்ன கப்பல் மாமாவே இலங்கைக்கு அனுப்பி வைத்தால் என்ன? கப்பல் இலங்கை சென்று சேர்ந்தது என்று கொட்டை எழுத்தில் போடலாம். ஒரு முறை கப்பல் பயணம் மேற்கொண்டால் மறு முறை போகவே மாட்டான். பேசாம தூத்துக்குடி இலிருந்து இலங்கைக்கு விமான சேவை கேட்டு பாருங்க. எதோ கப்பல் விட்ட நாடு ரொம்ப செழிக்கிற மாதிரி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross