காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெறுகிறது.
ஐந்தாம் நாளான நேற்று, (08.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ வழங்கினார்.
இறைத்தூதர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொள்ள வேண்டிய நேசம், அதில் குறை வைப்பவரின் நிலை, மரணித்தவர்களுக்காக உலகிலிருப்போர் செய்ய வேண்டியவை குறித்த நபிமொழிகளுக்கு விளக்கம் உள்ளிட்டவை நேற்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.
இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ வழங்குகிறார்.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.
தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம்.
|