Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:45:55 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6394
#KOTW6394
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 6, 2011
மாநில முதல் மாணவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2991 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மே மாதம் வெளியான பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுமுடிவுகளில் - மாநில அளவில் முதல் இடங்கள் பெற்ற மாணவ, மாணவியர் இன்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவை இன்று சந்தித்து, பரிசுகள் பெற்றனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (6.6.2011) தலைமைச் செயலகத்தில் 2010-2011 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மாணவர்கள் கல்வி கற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நல்ல குடிமகன்களாக உயர பல நல்ல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.



தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா +2 பொதுத் தேர்வில் முதலிடத்தைப் பிடித்த ஒரு மாணவருக்கு 50,000 ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த ஒரு மாணவருக்கு 30,000 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த நான்கு மாணவர்களுக்கு தலா 20,000 ரூபாய் வீதம், 80 ஆயிரம் ரூபாயும், ஆகா மொத்தம் 6 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.



பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் (SSLC) முதலிடத்தைப் பிடித்த ஐந்து மானவர்களுக்க் தலா 25,000 ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த 10 மாணவர்களுக்கு தலா 20,000 ரூபாய் வீதம், 2 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த 24 மாணவர்களுக்கு தலா 15,000 ரூபாய் வீதம், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 39 மாணவர்களுக்கு, 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன், பரிசுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.



அதை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்த மூன்று மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வீதம், 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த 10 மாணவர்களுக்கு தலா 20,000 ரூபாய் வீதம், 2 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த 20 மாணவர்களுக்கு தலா 15,000 ரூபாய் வீதம், 3 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 33 மாணவர்களுக்கு 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடந்த கல்வியாண்டில் (2010-2011) நடைபெற்ற அரசுப் பொது தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மொத்தம் 78 மாணவர்களுக்கு 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, மாணவர்கள் மேலும் கேள்வியில் சிறந்து விளங்கி, அதன் வழி நின்று அறிவுடன் கூடிய நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகிய பண்புகளுடன் வாழ்வில் மேலும் உயர வாழ்த்தினார்.

மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா, மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி ஊட்டி சாதனை படைக்க வாய்த்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. motivation
posted by syedahmed (GZ) [07 June 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 5092

Our C.M.'s motivation and boosting the confidence to the +2 & SSLC students is highly appreciated. Sincere thanks to our C.M.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved