உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகக் குழுவிலுள்ள வெற்றிடங்களுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது குறித்து அம்மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அண்மையில் நடைபெற்ற இக்ராஃ கல்விச் சங்க பொதுக்குழுவில், இக்ராஃவிற்கு புதிய தலைவராத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ்,
துணைத்தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - சிங்கை காயல் நல மன்றத்தின் புதிய தலைவர் ரஷீத் ஜமான்,
செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.ஜே.ஷாஹுல் ஹமீத்,
துணைச் செயலாளர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் அஹ்மத் சுலைமான்,
பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.எம்.டி.சுலைமான்,
செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் உள்ளிட்டோரடங்கிய இக்ராஃவின் புதிய நிர்வாகக் குழுவிற்கு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்கள் தலைமையிலான இக்ராஃவின் செயல்பாடுகள் அனைத்திற்கும் எமது தக்வா காயல் நல மன்றம் வழமை போல தன்னாலியன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் மனமுவந்து வழங்கிட ஆயத்தமாக உள்ளது என்பதை பெருமகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |