காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின விழா, காயிதேமில்லத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களின் பிறந்த தின விழா, அமைப்பின் 22ஆம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் இன்று மாலை 05.00 மணிக்கு குத்பா பெரிய பள்ளிவாசல் வெளிவளாகத்தில் நடைபெற்றது.
குத்பா பெரிய பள்ளியின் தலைவர் ஹாஜி ஷேக் மதார் தலைமை தாங்கினார். பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், முஹ்யித்தீன் பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்த ஹாஜி எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன், தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்த ஹாஜி டி.எம்.கவுஸ் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். ஹாஃபிழ் எம்.எஸ்.எஸ்.மஹ்மூத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். கே.எம்.எச்.அப்துல் வதூத் இன்னிசை பாடினார். எஸ்.எம்.எம்.டி.அமீர் சுல்தான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அமைப்பின் சேவைச் சுருக்கம் குறித்து செயற்குழு உறுப்பினர் எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன் விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, “காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாறு” என்ற தலைப்பிலும், தூத்துக்குடி மாவட்ட காழீயும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ “உலகம் போற்றும் உத்தம தூதர்” எனும் தலைப்பிலும் வாழ்த்துரை வழங்கினர்.
வரும் ஜூலை மாதத்தில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து மாநாட்டு விழாக்குழு தலைவர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் சுருக்கவுரையாற்றினார்.
அமைப்பின் செயற்குழு உறுப்பினர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அப்துல் காதிர் துஆவுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், மொத்தம் 313 பயனாளிகளுக்கு, திருக்குர்ஆன் பிரதிகள், பள்ளிப் பாடக்குறிப்பேடுகள், சுன்னத் சீருடைகள் வழங்கப்பட்டன. மேடையில் வீற்றிருந்த பிரமுகர்கள் அவற்றை பயனாளிகளுக்கு வழங்கினர்.
இவ்விழாவில் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் மஹ்மூத் லெப்பை தலைமையில் அமைப்பின் அங்கத்தினர் செய்திருந்தனர்.
|