ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவ-மாணவியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தனதில்லத்தில் விருந்தளிப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் மாவட்ட மாணவர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், 01.06.2011 அன்று மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனதில்லத்தில் விருந்து வைத்தார்.
ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், அவரது குடும்பத்தினர், அவர் பயின்ற எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோருட்பட மாவட்ட சாதனையாளர்கள் இவ்விருந்தில் கலந்துகொண்டனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பரிமளாவும் விருந்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
1. மாணவர்களுக்கு விருந்து வைத்த மாவட்ட ஆட்சியர்! காயல்பட்டினம் சாதனை மாணவர் posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் .ஜித்தாஹ் (.ஜித்தாஹ் )[02 June 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4965
ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவ-மாணவியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தனதில்லத்தில் விருந்தளித்து உபசரித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் அவர்களுக்கு
மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் .
வந்து குறிகிய காலத்தில் மாவட்ட மக்களின் மனம் எல்லாம்
நிறைந்த நமது மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் அவர்கள்
எல்லா நலமும் வளமும் பெற்று மக்கள் சேவை செய்யவும்
மீண்டும் மீண்டும் எங்கள் காயலுக்கும், தூத்துக்குடி மாவட்டம்
வரவும் அன்புடன் வேண்டுகின்றோம்
ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் மற்றும் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோருட்பட
அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்க வளமாய் நலமாய் ஆமீன் .
புதிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களையும் மிகுந்த
அன்புடனும் நேசத்துடனும் வரவேற்கின்றோம்
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் .ஜித்தாஹ் .
3. வாழ்க என்றும் வளமுடன்! posted bykavimagan m.s.abdul kader (dubai)[02 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4969
எளிமையும், நேர்மையுமிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களே!
எதையும் மாற்றும் சக்தி இறைவனுக்கு மாத்திரமே இருக்கிறது. புதிய ஆட்சியர் மூலமாக எமது மக்களுக்கும்,
தங்கள் மூலமாக கிருஷ்ணகிரி மக்களுக்கும் நன்மையே
நடக்க இறைவன் நாடியிருப்பின் அதைத் தடுக்க யாரால் முடியும்? எது எப்படியிருப்பினும், உங்களது மாற்றம் எங்களுக்கு வருத்தமே!
விளைந்த நெல்கதிர் தலைசாய்த்து நிற்பது போன்று, படித்து
அறிவிற்சிறந்த நீங்கள் அடக்கத்தோடு, எளிமையுடன் நடந்து
கொண் டவிதம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம்!
இறையருளால், நீங்கள் விரும்பியபடி தூத்துக்குடி மாவட்டத்தில், அதுவும் எங்கள் காயல் மண்ணில் இருந்து
அதிவிரைவில் மாநிலத்தின் முதல்மாணவர் அல்லது மாணவி உங்களை எங்களின் பிரதிநிதியாக சந்திப்பார்.
அப்போது இன்ஷா அல்லாஹ், எங்களது விருந்தினராக
எமதூருக்கு நீங்கள் வரவேண்டும் என்ற எனது ஆவலை பதிவு செய்து, நீங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ
வாழ்த்துகிறேன்.
5. இந்தியாவின் தலை சிறந்த மாவட்ட ஆட்சியாளர்!! இக்ராவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள். posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[02 June 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4973
அஸ்ஸலாமு அழைக்கும்.
நான் ஏற்கனவே மாவட்ட ஆட்சியாளரை பற்றிய பதிப்பு இது.
நாம் நல்ல ஒரு மாவட்ட கலெக்டரை இழந்துள்ளோம். நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளோதான். சி.ந.மகேஸ்வரன் I.A.S. அவர்களே! தாங்கள் மிக சிறப்பாக பணியாற்றி எங்களின் மனதை கொள்ளை கொண்டதமைக்கு வாழ்துக்கள்.
உங்கள் நேர்மையான ,மாணவ செல்வங்களை உற்சாக படுத்தும் திறன், அணைத்து சமுதாய மற்றும் அதிகாரிகளை நேர்மையுடன் பணியாற்ற வைக்கும் திறன், அணைத்து அறிவியல் மற்றும் தகவல் தொடர்புகளையும் அமுல்படுத்தி மக்களின் சேவையை முதல் பணி என்று பாடுபட்ட உங்களை போன்ற அதிகாரிகள் நமது நாட்டிற்கு மிக மிக அவசியம் என்பதுடன் புதிதாக வந்துள்ள DR.செல்வராஜ் I.A.S. அவர்கள் உங்களையும் மிஞ்சி மிக சிறப்பாக பணியாற்ற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆக, சி.என்.மகேஸ்வரன் I.A.S. அவர்கள் தான் இன்றைய இந்தியாவின் மிக மிக தலை சிறந்த மாவட்ட ஆட்சியாளர்.
அ.தி.மு.க. வின் பொறுப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! தங்கள் முயற்சிகளை கொண்டு நமது மாவட்ட ஆட்சியாளரை நமது மாவட்டத்திலே தொடர ஆவனைசைய்யவூம்.
இக்ராவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!
தங்களின் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவனை நிகழ்சிகளின் சிறப்பு விருந்தினராக அல்லது தனி நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தி நமது மாவட்ட ஆட்சியாளரான சி.என்.மகேஸ்வரன் I.A.S. அவர்களை அழைத்து நமது காயல் மக்களின் அன்பினை வெளிபடுத்தும் முகமாக நினைவு பரிசினை வழங்கி கவ்ரவிக்க மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
6. பாராட்டுதலுக்குரிய கலெக்டர்!! posted bySalai.Mohamed Mohideen (USA)[03 June 2011] IP: 72.*.*.* United States | Comment Reference Number: 4979
நமது கலெக்டர் அவர்களின் இந்த அருமையான செயல்பாடு நிச்சயமாக பாராட்ட படவேண்டிய ஒன்று.
மாணவர்களை ஊக்குவிப்பதோடு நின்று விடாமல் அந்த மாணவர்களை பெற்றவர்களையும் அந்த மாணவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரையும் இந்த விருந்துக்கு அழைத்து அவர்களையும் பெருமைபடுத்தி, கௌரவித்து இருப்பது ஒரு புதுமையான சிந்தனையும் கூட என்றே எனக்கு தோனுகிறது.
பொதுவாக கலெக்டர்களுக்கு தங்களுடைய பணிச்சுமையில் மாணவர்களை பற்றி சிந்திக்க நேரம் கிடைப்பதே அரிது. ஆனால் இந்த செயல் நமது கலெக்டர் மாணவர்கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் ஈடுபாட்டை வெளிபடுத்துகிறது.
மேலும் இதுமாதிரியான நிகழ்வு வேறெந்த மாவட்டத்திலும் நடந்ததாக தோணவில்லை. நிச்சயமாக இந்த மாதிரியான நிகழ்வுகள் மற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் என்பதில் எந்ததொரு சந்தேகமுமில்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross