உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation) ஒரு அங்கமான International Agency for Research on Cancer (IARC) உடைய தலைமையில் - பிரான்ஸ் நாட்டின்
லியோன் நகரில் மே 24 முதல் மே 31 வரை ஆய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 14 நாடுகளில் இருந்து 31 விஞ்ஞானிகள்
கலந்துக்கொண்டனர்.
இக்குழு கடந்த பல ஆண்டுகளாக - ராடார், மைக்ரோவேவ், ரேடியோ, தொலைகாட்சி ஒலிபரப்பு/ஒளிபரப்பு, மொபைல் ஃபோன் போன்ற சாதனங்களின்
கதிர்வீச்சுகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளிவந்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் பலவற்றை ஆய்வு செய்தது.
ஆய்வின் முடிவில் - மொபைல் ஃபோன் பயன்படுத்துவதால் மூளைக்கு வரும் இரு வகை (Glioma மற்றும் Acoustic Neuroma) புற்று நோய்க்கான (Brain Tumours)
வாய்ப்புகள் அதிகரிப்பதற்க்கான ஆதாரங்கள் குறைந்தளவு உள்ளது என்றும், பிற புற்றுநோய்கள் அதிகரிப்பதற்க்கான ஆதாரங்கள் போதிய அளவு
தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவினால் புற்று நோய் உண்டாக்க வாய்ப்புள்ள பொருட்களின் தரப்பட்டியலில் (Classification of Carcinogens) - 2B பிரிவில்
மொபைல் ஃபோன் பயன்பாடு இடம் பெறுகிறது.
மொபைல் ஃபோனை எந்தளவு பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என்று இவ்வாய்வு உறுதியாக கூறாவிட்டாலும், பத்தாண்டு கால
கட்டத்தில் தினசரி சராசரியாக 30 நிமிடங்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்துவது, Glioma என்ற மூளை புற்று நோய் (Brain Tumour) வர 40 சதவீத வாய்ப்புகள்
அதிகரிப்பதாக முன்னர் வெளியான ஆய்வு முடிவினை இக்குழு மேற்கோள் காட்டியுள்ளது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேலும் ஆய்வுகளை தொடர வேண்டும் என்றும், அது வரை பாதுகாப்பான முறையில் மொபைல் ஃபோன்
பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவேண்டும் என்றும் IARC நிறுவனத்தின் இயக்குனர் கிரிஸ்டோஃபர் வைல்ட் தெரிவித்துள்ளார்.
தகவல்:
காஸ்மோஸ் Magazine |